Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசுப் பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் இந்தாண்டு அதிகம்!!

#image_title

அரசுப் பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் இந்தாண்டு அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது.  தமிழகத்தில் மொத்தம், 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 மாணவர்கள் தேர்வெழுதினர்.
முதல் 03.04.2023 வரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் 08.05.2023 தேர்வெழுதிய மொத்த மாணக்கர்களின் எண்ணிக்கை : 8,03,385
மாணவியர்களின் எண்ணிக்கை : 4 லட்சத்து 21ஆயிரத்து 13 மாணவர்களின் எண்ணிக்கை :-
3 லட்சத்து 82 ஆயிரத்து 371
தேர்ச்சி விவரங்கள் :
மொத்தம் தேர்ச்சிப் பெற்றவர்கள்: 7,55,451 (94.03%)
மாணவியர் 4,05,753 (96.38%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்கள் 3,49,697(91.45%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மூன்றாம் பாலினத்தவர் 1 (100.00%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்களை விட மாணவியர் 4.93% அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
கடந்த மே 2022-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணக்கர் 8,06,277. தேர்ச்சிப் பெற்றோர் : 3,82,371 7,55,998. தேர்ச்சிச் சதவிகிதம் 93.76% (சதவீதம்).
அரசுப்பள்ளி மாணவர்கள் 89.80 சதவீதமும், அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்கள் 95 99% சதவீதமும், தனியார் பள்ளி மாணவர்கள் 99.08% சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டு அரசுப் பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Exit mobile version