Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

போன் மோகத்தின் உச்சம்: புருஷன் பிள்ளைகளை விட போன் முக்கியமென்று மனைவி எடுத்த விபரீத முடிவு!!

போன் மோகத்தின் உச்சம்: புருஷன் பிள்ளைகளை விட போன் முக்கியமென்று மனைவி எடுத்த விபரீத முடிவு!!

நெல்லை மாவட்டம் பனங்குடி பகுதியைச் சேர்ந்த மைக்கேல் மதன் சிங் என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த சினேகா என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு ஒன்றை வயதில் ஒரு குழந்தையுமுள்ளது.மைக்கேல் என்பவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.

சினேகா அடிக்கடி போன் பேசி கொண்டிருப்பதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக சினேகா கோபித்துக் கொண்டு சில நாட்களாக தந்தை வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று சினேகா தனது கணவரின் தங்கை வீட்டிற்கு சென்றுள்ளார் அங்கேயும் அவர் போன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.
இதனைக் கண்ட கணவர் ஆத்திரத்தில் சினேகா பேசிக் கொண்டிருந்த போனை பிடுங்கி உடைத்துள்ளார்.

இதனால் கடும் கோபத்தில் அவ்விடத்தை விட்டு சென்ற சினேகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.அலறல் சத்தம் கேட்கவே பெற்றோர்கள் கதவினை உடைத்து சினேகாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.இவரை பரிசோதித்த மருத்துவர்கள் சினேகா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதனால் சினேகாவின் உறவினர்கள் மைக்கேல் சினேகாவை அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாகவும் இவர்தான் அடித்து சினேகாவை கொன்று விட்டதாகவும் அடுக்கடுக்காக புகார் தெரிவித்தனர்.இதனையடுத்து மைக்கேலை காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தினர்.

மேலும் அம்மாவட்ட கலெக்டரும் நேரடியாக விரைந்து சினேகாவின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்.மேலும் சினேகாவின் உடலில் வேறு எங்கும் காயங்கள் இல்லை என்றும்,கழுத்தில் மட்டுமே தூக்கு போட்ட காயம் இருக்கிறதென்று கூறிய அதிகாரிகள் சினேகாவின் உடலை பாளை மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் போன் பயன்படுத்த வேண்டாமென்று கணவர் கூறியதால் மனம் உடைந்து சினேகா தற்கொலை செய்து கொண்டாரா?அல்லது கணவன் கொலை செய்தாரா? என்ற கோணத்தில் பனங்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டு உள்ளனர்.

Exit mobile version