நீர்நிலைகளை ஆக்கிரமிப்பவர்களுக்கு சரியான பதிலடி! உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

0
141

தமிழகத்தில் நீர்நிலைகளை அபகரித்து மோசடியாக பத்திர பதிவு செய்து வருவது வாடிக்கையாகி வருகிறது.நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து அந்த நீர் நிலைகளை நீர்த்து போக செய்து அந்த நீர் நிலைகளில் வீட்டுமனை விற்பனை செய்வதன் காரணமாக தான் மழை நாட்களில் வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்து பலர் தவித்து வருகிறார்கள்.

இதனை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஜனவரி மாதம் 27 ஆம் தேதி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சொத்து பதிவு செய்யும்போது அந்த சொத்து நீர் நிலையில் இல்லை என்பதற்கான உறுதிமொழி பத்திரம் இணைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை அமல்படுத்துவதற்கான உத்தரவை பத்திர பதிவுத்துறை தலைவர் சிவனருள் பிறப்பித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வருவாய்த்துறையின் தமிழ் நிலம் தகவல் தொகுப்பில் நீர்நிலை என்று காட்டப்பட்டிருக்கின்ற பகுதிகளில் சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

அதே போல இது போன்ற பகுதிகளுக்கு மின்சாரம் இணைப்பு, கட்டட அனுமதி, உள்ளிட்டவை வழங்கப்படமாட்டாது. ஆனாலும் சமீபத்தில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் பதிவுக்காக வரக்கூடிய சொத்து நீர்நிலை பகுதியில் என்பதற்கான உறுதிமொழி ஆவணம் கட்டாயமான ஒன்றாகும் என தெரிவித்திருக்கிறார்.

இதற்கான உறுதிமொழி ஆவணம் எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்துகொள்வதற்காக மாதிரி வெளியிடப்பட்டுள்ளது அதாவது இந்த ஆவணத்தை பிரதான பத்திரத்துடன் ஒன்றாக இணைத்து ஸ்கேன் செய்யவும், இந்த வழிமுறைகளை தவறாது சார்பதிவாளர் கடைபிடிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.