Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கூட்டத்தில் சிறுமியிடம் எல்லை மீறிய நபர்! தாக்கிய தாய் அதிமுக பிரச்சாரத்தில் ஏற்பட்ட சலசலப்பு! 

#image_title

கூட்டத்தில் சிறுமியிடம் எல்லை மீறிய நபர்! தாக்கிய தாய் அதிமுக பிரச்சாரத்தில் ஏற்பட்ட சலசலப்பு! 

அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் நபர் ஒருவர் சிறுமியிடம் அத்துமீறியதால் அவரது தாய் தாக்கியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த மாதம் 4-ஆம் தேதி மரணமடைந்தது அடுத்து இந்த தொகுதியில் வருகின்ற 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது.

இடைத்தேர்தலையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர், அதிமுக கூட்டணி கட்சியினர், தேமுதிக கட்சியினர், நாம் தமிழர் கட்சியினர், உட்பட பலர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவது காங்கிரஸ் வேட்பாளர் தான் என்றாலும் திமுக -அதிமுக இடையே தான் நேரடி போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் ஈரோட்டில் உள்ள வேப்பம்பாளையத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரின் அறிமுக பிரச்சார கூட்டம்  நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து கூட்டத்தில் சிறுமியிடம் நபர் ஒருவர் எல்லை மீறியதாக கூறி தாய் ஒருவர் கோபமடைந்து அவரை ஆவேசமாக தாக்க முற்பட்டதோடு கடுமையாக பேசியதால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த அதிமுகவினர் அவரை சமாதானம் செய்யவே அவர் சிறுமியை அழைத்துக் கொண்டு கூட்டத்தை விட்டு வெளியேறினார்.

தேர்தல் நடக்கும் சமயத்தில் ஈரோட்டில் வேட்பாளர் அறிமுக பிரச்சார பொதுக் கூட்டத்தில் சிறுமியிடம் நபர் ஒருவர் எல்லை மீறிய செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

Exit mobile version