Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாஸ்குக்கு பதில் பாம்பை அணிந்த வந்த நபர்

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன. தற்போதுதான் முடக்கங்கள் தளர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. ஆனாலும் அனைத்து நாடுகளிலும் மாஸ்க் அணிவது கட்டயமாக்கப்பட்டது. அந்த வகையில் பிரிட்டனில் வித்தியாசமான ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பேருந்தில் பயணம் செய்யும் ஒரு நபர் மாஸ்க் அணிவதற்கு பதிலாக பாம்பையே மாஸ்காக அணிவித்துள்ளார். இது சக பயணிகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

Exit mobile version