Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மோடி ஜெயிப்பதற்காக விரலை வெட்டி ரத்த காணிக்கை அளித்த நபர்!

The person who cut his finger and donated blood to win Modi!

The person who cut his finger and donated blood to win Modi!

மோடி ஜெயிப்பதற்காக விரலை வெட்டி ரத்த காணிக்கை அளித்த நபர்!

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த திவிர பாஜக ஆதரவாளரான அருண் வெர்னேகர் என்ற நபர் நடைபெறவுள்ள தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தனது விரலை வெட்டி ரத்த காணிக்கை அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி பாஜகவின் தீவிர ஆதரவாளரான அருண் வெர்னேகர் அவரது வீட்டில் பிரதமர் மோடிக்கு சிறியதாக கோவில் ஒன்றை கட்டியுள்ளார். அதில் தினமும் மோடிக்கு பூஜை செய்து வருவாராம். அந்த வகையில் தேர்தலில் மோடி வெற்றி பெறுவதற்காக இந்த கோவிலில் ரத்த காணிக்கை செய்ய முயன்ற அருண் கத்தியால் அவரின் விரலை கீற முயன்றுள்ளார்.

ஆனால் தவறுதலாக அவரின் ஆள்காட்டி விரலின் முன்பகுதி முழுவதும் துண்டாகி விட்டது. இருப்பினும் அந்த ரத்தத்தை சேமித்து வைத்த அவர் “மாகாளி எங்கள் மோடியை காப்பாற்று” என்று ரத்தத்தால் எழுதியுள்ளார்.இதனை தொடர்ந்து அருணை அவரின் குடும்பத்தார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் துண்டான விரலை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது என்று கூறிவிட்டார்களாம். அதுமட்டுமின்றி அந்த விரலை மொத்தமாக அகற்ற வேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது.இந்த சூழலில் கூட அருண் இழந்த அந்த விரலை காளிக்கு காணிக்கையாக செலுத்தியதாக கூறியுள்ளார்.இவரின் இந்த முட்டாள்தனமான செயலை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

Exit mobile version