Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எருமை மாட்டை ஜோடி சேர விடாமல் தடுத்த நபர்!! தடுத்த நபரை குத்தி கொலை செய்து பழிக்கு பழி வாங்கிய எருமை!!

the-person-who-prevented-the-buffalo-from-mating-a-buffalo-took-revenge-by-stabbing-the-person-who-stopped-him

the-person-who-prevented-the-buffalo-from-mating-a-buffalo-took-revenge-by-stabbing-the-person-who-stopped-him

எருமை மாட்டை ஜோடி சேர விடாமல் தடுத்த நபர்!! தடுத்த நபரை குத்தி கொலை செய்து பழிக்கு பழி வாங்கிய எருமை!!

பெண் எருமை மாட்டுடன் ஜோடி சேர விடாமல் ஆண் எருமை மாட்டை தடுத்த நபரை அந்த ஆண் எருமை மாடு குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாவணகெரேவின் சென்னகிரியில் உள்ள லிங்கதஹள்ளி கிராமத்தினர் ஆண் எருமையை கடவுளுக்கு நேர்ந்து விட்டுள்ளனர்.கடவுளுக்கு நேர்ந்துவிட்ட இந்த ஆண் எருமை லிங்கதஹள்ளி கிராமத்தில் இருந்து அருகில் இருக்கும் பசவனஹள்ளி கிராமத்திற்கு வந்து பெண் எருமையுடன் சேர்ந்து தினமும் தொல்லை கொடுத்துள்ளது.

எனவே தினமும் தொந்தரவு கொடுக்கும் இந்த ஆண் எருமையை 50 வயதுள்ள ஜெயண்ணா என்பவர் அடித்து விரட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.பெண் எருமைகளுடன் சேர விடாமல் தன்னை தடுத்த ஜெயண்ணா அவர்களின் மீது கோப்பட்ட ஆண் எருமை அவரை இரண்டு மூன்று முறை முட்ட முயற்சி செய்த போதும் அவர் தப்பித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 17ம் தேதி மாலை  ஜெயண்ணாவை அந்த ஆண் எருமை சரமாரியாக கொம்புகளால் குத்தியது.மார்பில் குத்து வாங்கிய ஜெயண்ணா அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த விபத்துக்கு கிராம பஞ்சாயத்தின் அலட்சியமே காரணம் என்று கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பசவனஹள்ளி கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் இவ்வாறு ஆண் எருமை மாடு வந்து தொந்தரவு தருவதாக பஞ்சாயத்து அதிகாரிகளிடமும், காவல் துறையினரிடமும் புகார் அழித்ததாக கிராம மக்கள் கூறுகின்றனர்.இதைப்பற்றி பஞ்சாயத்து அதிகாரிகளும் போலீஸ் அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருந்ததால் ஒருவருடைய உயிர் போனது. இவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால் அவர் இறந்திருக்க மாட்டார் என்று கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version