Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருமணத்திற்கு சென்று வீடு திரும்பியவர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

The person who returned home after going to the wedding died suddenly! Local people in shock!

திருமணத்திற்கு சென்று வீடு திரும்பியவர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் தென்கம்புதூர் அருகே உள்ள குளத்துவிளையை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (34). இவர் கூடங்குளம் அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு 8 மணிக்கு நண்பருடைய திருமணத்தில் கலந்து கொண்டு அலெக்சாண்டர் வீட்டிற்கு வந்து தூங்கச் சென்றுள்ளார்.

  மேலும் அவர் இரவு 10 மணி அளவில் அவருடைய மனைவியிடம் லேசாக  நெஞ்சு வலிப்பதாகவும்  கூறியுள்ளார். மேலும் அவரது மனைவி அலெக்சாண்டர்ரின்   தந்தை  ஜார்ஜ்மெய்யேல்க்கு தகவல் தெரிவித்தார்.  அந்த தகவலின் பேரில்  ஜார்ஜ்மெய்யேல் உடனடியாக ஒரு ஆட்டோவை பிடித்து வந்தார்.

மேலும் அலெக்சாண்டர்ரை  நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவரை  பரிசோதித்து டாக்டர்கள்  இவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர். மேலும் இது குறித்து ஜார்ஜ் மெய்யேல் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் அலெக்சாண்டர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆச்சரியபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version