நண்பன் படத்தை போல மருத்துவமனைக்குள் வண்டியில் சென்ற நபர்!! மகனின் சிகிச்சைக்காக தந்தை செய்த செயல்!!
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் வரும் காட்சியை போலவே தந்தை ஒருவர் மகனின் சிகிச்சைக்காக இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குள் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் ஜெயின் அவர்கள் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் லவித்ரா ஜெயின் அவர்களுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக எம்.எபி.எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மனோஜ் ஜெயின் அவர்கள் மகன் லவித்ரா ஜெயினை அழைத்து சென்றுள்ளார்.
அங்கு சக்கர நாற்காலி இல்லாததால் மனோஜ் ஜெயின் அவர்கள் மகன் லவித்ரா ஜெயினை நண்பன் படத்தில் ஒரு காட்சியில் வருவது போல இருசக்கர வாகனத்தை ஓட்டியபடியே மருத்துவமனைக்குள் இருக்கும் லிப்டுக்குள் நுழைந்த மனோஜ் ஜெயின் தனது மகனை மூன்றாவது மாடியில் இருக்கும் எலும்பியல் பிரிவுக்கு இருசக்கர வாகனம் மூலமாக சிகிச்சை பெறுவதற்காக அழைத்து சென்றார். இதையடுத்து எலும்பு முறிவு ஏற்பட்ட லவித்ரா ஜெயின் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து தந்தை மனோஜ் ஜெயின் அவர்கள் “என் மகனின் சிகிச்சைக்காக சக்கர நாற்காலி கேட்டேன். 10 முதல் 15 முறை கேட்டிருப்பேன். ஆனால் சக்கர நாற்காலியோ அல்லது ஸ்ட்ரச்சரோ கிடைக்கவில்லை. இதனால் மருத்துவமனை நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு இருச்சக்கர வாகனத்துடன் லிப்டுக்குள் சென்றேன்” என்றார்.
இது குறித்து மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் கர்னேஷ் கோயல் அவர்கள் “மனோஜ் ஜெயின் அவர்களின் இருசக்கர வாகனம் மருத்துவமனையின் வாசல் வரை செல்ல மட்டுமே அனுமதி உள்ளது. ஆனால் சக்கர நாற்காலி கிடைக்காததால் அவர் இருசக்கர வாகனத்துடன் மகனின் சிகிச்சைக்காக லிப்டுக்குள் சென்றுள்ளார்” என்று கூறினார்.
வழக்கறிஞர் மனோஜ் ஜெயின் அவர்கள் செய்த இந்த செயல் போல நடிகர் விஜய் நடித்த நண்பன் திரைப்படத்திலும் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்த 3 இடியட்ஸ் திரைப்படத்திலும் இது போல ஒரு காட்சி உள்ளது. இவரது இந்த செயல் மகன் மீது இவருக்கு இருக்கும் அதீத அன்பை காட்டுகின்றது.