2003 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான ” பிதாமகன் ” திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக திரையில் தோன்றியவர் நடிகர் கஞ்சா கருப்பு. அதன்பின் பல்வேறு திரைப்படங்களில் தன்னுடைய திறமையால் சிறந்த காமெடி நடிகராக ரசிகர்கள் மனதில் தம் பிடித்தார்.
இப்படி படிப்படியாக வளர்ச்சியடைந்த நடிகர் கஞ்சா கருப்பு அவர்கள் தன்னுடைய வளர்ச்சி குறித்தும் ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனர் பாலா மீது தான் கொண்ட மரியாதை குறித்தும் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
கஞ்சா கருப்பு பெட்டியில் அளித்த விஷயங்கள் பின்வருமாறு :-
நான் என்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனர் பாலா அண்ணன் அவருடைய அலுவலகத்தில் ஆபீஸ் பாயாக பணியில் சேர்ந்தேன். அப்பொழுது இயக்குனர் பாலா அண்ணன் அவர்கள் எனக்கு அலுவலகத்திலேயே தங்கிக் கொள்ள அனுமதி கொடுத்து நடிக்க வாய்ப்பு வழங்கினார். அச்சமயத்தில் அவர் என்னிடத்தில் நீ சிறந்த நடிகனாக ஆன பின்பு என்னுடைய பெயரை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், அதற்கு முன்னால் பொழுதும் என்னுடைய பெயரை பயன்படுத்த கூடாது என்றும் தெரிவித்திருந்தார் என்று நடிகர் கஞ்சா கருப்பு அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
மேலும், கஞ்சா கருப்பு தெரிவிக்கையில் நான் என்றுமே இயக்குனர் பாலா அண்ணா முன்னிலையிலும் இயக்குனர் அமீர் அண்ணாவின் முன்னிலையிலும் அமர்ந்து பேச மாட்டேன். என்னுடைய வாழ்க்கையில் இவர்கள் இருவரும் மிகவும் முக்கியமானவர்கள். எனவே இவர்களின் முன்னிலையில் பேசும்பொழுது கைகாட்டி நின்று பேசுவது என்னுடைய இயல்பாகவே மாறிவிட்டது என்று தெரிவித்திருக்கிறார்.