Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் பெயரின் முதலெழுத்து ‘G’-ல் ஆரம்பிக்கிறதா? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான்..கவனமா படியுங்க !

எண் கணிதத்தின்படி ‘G’ எண் 3-ஐ குறிக்கிறது, எண் 3 வியாழனால் ஆளப்படுகிறது, வியாழன் ஞானத்தின் கிரகம் ஆகும். இந்த எழுத்தில் பெயர் கொண்டவர்கள் கடின உழைப்பாளியாகவும், வலிமையோடும் இருப்பார்கள். பொதுவாக ‘G’ எழுத்தில் பெயர் கொண்டவர்கள் மிகவும் தூய்மையானவர்கள், எளிமையானவர்கள் என்று சொல்லலாம்,

இவர்கள் தங்கள் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறிவிடுகின்றனர். பெரும்பாலும் இவர்களது வாழ்க்கையின் முக்கிய நோக்கம் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை நோக்கி முன்னேறுவது தான்.

எந்தவொரு விஷயத்திற்கும் இவர்கள் முடங்கி போய் உட்கார்ந்து அழுக்கமாட்டார்கள், இவர்கள் தங்கள் தவறுகளில் இருந்து பாடத்தை கற்றுக்கொண்டு பின்னர் மன உறுதியுடன் சிறப்பாக வாழ முன்னேறுவார்கள்.

இவர்கள் பெரும்பாலும் கற்றல், அறிவைத் தேடுதல் மற்றும் தங்கள் வாழ்க்கையை வெற்றிபெறச் செய்வதில் கவனம் செலுத்துகிறார்கள். பெரும்பாலும் இவர்கள் காதலில் சிறிது அதிர்ஷ்டமற்றவர்களாகவே இருக்கின்றனர்.

அவர்கள் ஒருவரிடம் உண்மையான அன்பைக் கண்டால் அவர்கள் மீது முழுமையான நம்பிக்கையை வைத்துவிடுவார்கள் மற்றும் இறுதிவரை அவர்களுடனேயே பயணிக்க வேண்டும் என நினைக்கின்றனர். மேலும் இவர்கள் மற்றவர்களை மதிப்பதோடு, சுய மரியாதையை உடையவர்களாகவும் திகழ்கின்றனர்.

Exit mobile version