கேப்டன் தீபக் வசந்த் சாத்தே
கோழிக்கோடு பகுதியில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் பைலட்.
விமானததிலுள்ள லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை என்று புரிந்து, அவர் ஏர்போர்ட்டை 3 முறை வட்டமடித்து எல்லா பெட்ரோலையும் தீர்த்துவிட்டு, விமானத்தின் எஞ்சினை ஆப் செய்துவிட்டு ப்ளைட்டின் உடல்பாகம் தரையில் படும்படி லேண்டிங் செய்திருக்கிறார்(Belly Landing).
அவர் புத்திசாலித்தனமாக செய்த இந்த காரியத்தினால் விமானம் தீப்பிடிக்கவில்லை. 18 மரணங்களுடன் இழப்பை சந்திக்க நேர்ந்தது அவரின் திறமையால் தான். இல்லை என்றால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உயிர்சேதம் நடந்திருக்கும்.
தன் மரணம் உறுதி என்று தெரிந்தபிறகும் அதைப்பற்றி கவலைப்படாமல் பல உயிர்களை காப்பாற்றிய திலிப் சாத்தே போன்ற மாவீரர்களால் தான் மனித நேயம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.
மேலும் அவரைப் பற்றி முகநூலில் அவரது உறவினர், கடந்த 1990ஆம் ஆண்டே விமான விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தவர், அவர் 6 மாத கால தீவிர சிகிச்சைக்கு பிறகு மீண்டும் பணியில் சேர்ந்தார் என அவரது உறவினர் நிலேஷ் சாத் குறிப்பிட்டுள்ளார். நிலேஷ் சாத் தற்போது தேசிய நெடுஞ்சாலை துறையின் நிதி ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
தீபக் சாத் முதலில் இந்திய விமானப்படையில் வின் கமாண்டராக பணியாற்றியவராவார். இவருக்கு 36 ஆண்டுகள் பணி அனுபவம் உடையவராகவும், தேசிய பாதுகாப்பு அகாடமியில் சிறப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருந்துள்ளார். அவர் 21 ஆண்டுகள் தேசிய விமானப்படையில் பணியாற்றியவர். பிறகு 2005ஆம் ஆண்டு முதல் வர்த்தக ரீதியாக விமானப் போக்குவரத்துக்கு மாறினார் என்று அவரது உறவினர் கூறியுள்ளார்.