டி.எஸ்.பி மீது லாரி ஏற்றி கொலை செய்த மர்ம நபரை வலை வீசி தேடும் பணியில் போலீஸ் தீவிரம்!..
தலைநகர் புதுடெல்லியை ஒட்டி அமைந்துள்ள அரியானா மாநிலத்தில் சுரங்க மாபியா கும்பல் ஒன்று பட்டப் பகலில் ஒரு மூத்த போலீஸ் அதிகாரியின் மீது லாரியை ஏற்றி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரியானாவில் ஆரவல்லி மலைத்தொடருக்கு அருகேயுள்ள பச்கான் என்ற இடத்தில் சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுப்பதாக டி.எஸ்.பி அதிகாரியில் இருப்பவர் சுதேந்திர சிங் பிஸ்னோய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சில போலீஸ் குழுவுடன் அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.
காவல்துறையினரை கண்டதும் சட்டவிரோத சுரங்கத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து சிலர் தப்பியோடினர். அப்போது டி.எஸ்.பி நடுவில் நின்று கொண்டிருந்த அவர் கல் ஏற்றி சென்றவர்களை நிறுத்துமாறு சைகைகளை மூலம் காட்டினார்.அதை மதிக்காத லாரி டிரைவர் ஒருவர் டி.எஸ்.பி மீது லாரியை ஏற்றினார்.
இதில் அந்த அதிகாரி பலத்த படுகாயமடைந்தார்.இந்த விபத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து அந்த நபர் தப்பி ஓடினார். இதில் ஈடுபட்ட அனைத்து நபர்களும் ஆளுக்கு ஒரு பகுதியில் பிரிந்து சென்றதால் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.இது குறித்து போலீஸ் எஸ்.பி வருண் சிங்கிளா கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட அந்த நபரை பிடிக்க சுமார் 30 இடங்களில் காவல்துறையினரால் ரைடு பணியில் ஈடுப்படுத்தப்பட்டார்கள்.
அந்த நபர் தன் இருக்கும் இடத்தை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருப்பதால் கண்டுபிடிப்பது கடினமாகவுள்ளது எனவும் அதனால் அவரை கண்டுபிடிக்க சில தனிப்படை போலீசார் நியமனம் செய்துள்ளோம் எனத்தெரிவித்துள்ளார்.