Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜய்-க்கு போலிசார் போட்ட ஆடர்.. இதை கட்டாயம் செய்யவே கூடாது!!

The police have put an order on Vijay.. This must not be done!!

The police have put an order on Vijay.. This must not be done!!

TVK: தவெக கட்சி மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் கட்சி தலைவருக்கு ரோடு ஷோ நடத்த வேண்டாம் என காவல் துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தனது முதல் கட்சி மாநாடு நாளை 27.10.2024 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. அந்த முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடக்கிறது. இதில் ஏராளமானோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த நிலையில் தவெக மாநாட்டிற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டிற்கான வேலைகள் விக்கிரவாண்டியில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதில் சுமார் 1 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு மிக பெரியது, அந்த அளவிற்கு தொண்டர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தவெக கட்சி தலைவர் மிகப்பெரிய நடிகர் என்பதால் ரோடு ஷோ நடத்தினால் பலவிதமான பிரச்சனைகள் நடக்கும் என எண்ணி காவல்துறை அதிகாரிகள் இந்த நிகழ்ச்சி நடத்த வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர் என கூறப்படுகிறது.

இதனால் பலவிதமான பிரச்சனைகள் தடுக்க முடியும் என காவல்துறை எண்ணுகிறார்கள். இது தவெக கட்சி தலைவருக்கும் ,தனது தொண்டர்களுக்கும் ஒரு பாதுகாப்பாக அமையும் என நினைக்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் விஜய் நேரடியாக மாநாட்டுக்கு வராமல் இன்று புதுச்சேரி சென்று விட்டு அங்கிருந்து மாநாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது என பல தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version