முதியவரை ரயில் தண்டவாளத்தில் தலைகீழாக தொங்கவிட்ட போலீசார்! சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!
காலம் காலமாக போலீசார் பொதுமக்கள் மீது வன்மம் காட்டுவது வேடிக்கையாக ஒன்றாக ஆகிவிட்டது. செய்யாத குற்றத்திற்கு அப்பாவி மக்கள் தண்டிக்கப்பட்டு வருவதும் மாறாத ஒன்றாக தான் உள்ளது. அவ்வாறான ஓர் சம்பவம் தான் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் ரயில் நிலையத்தில் காவலர் ஒருவர் முதியவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் முதியோர் ஒருவர் இருந்துள்ளார். அவர் மேல் எந்த குற்றம் இல்லாத போதிலும் அங்கு இருந்த காவல்துறை அதிகாரி அவரை தரதரவென்று இழுத்து தனது பூட்ஸ் கால்களால் மிதித்துள்ளார்.
அவ்வாறு அவரை சரமாரியாக தாக்கிய போதும் பொதுமக்கள் பார்த்தபடியே தான் நின்றார்களே தவிர தடுக்க முன் வரவில்லை. அந்த போலீசார் தனது அதிகாரத்தாலும் தன்னை யார் கேட்க போகின்றார்கள் என்ற திமிராலும் அவர் எல்லை மீறி அந்த முதியவரிடம் நடந்து கொண்டார். அவரை சரமாரியாக தாக்கியது மட்டுமின்றி அந்த முதியவரை தண்டவாளத்திலிருந்து தலைகீழாக தொங்கவிட்டு வேடிக்கை காட்டியுள்ளார். இவ்வாறு இவர் செய்த அட்டூழியத்தை அங்கிருந்த ஒரு பயணி தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீடியோ பதிவிட்டதையடுத்து தற்பொழுது அது வைரலாகி வருகிறது. மனிதாபிமானம் இன்றி இவ்வாறு காவலர் முதியவரிடம் நடந்து கொண்டது காவல்துறை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதியவரிடம் மிருகத்தனமாக நடந்து கொண்ட காவலரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து அந்த அதிகாரியிடம் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.