Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு அடுத்து அடுத்து சிக்கும் போலீஸ் அதிகாரிகள்!!

திருச்சி மாவட்டத்தில் காவலர் ஒருவர் முதியவரை தாக்கியதால் காவலர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி கண்டோன்மென்ட் எம்ஜிஆர் சிலை ரவுண்டானா அருகே சீருடை அணிந்த காவலர் ஓட்டிவந்த இருசக்கர வாகனமும், முதியவர் ஒருவரின் மிதிவண்டியும் மோதிக்கொண்டன. இதனிடையே இருவருக்கும் ஏற்ப்பட்ட வாக்குவாதத்தின் போது, முதியவர் கன்னத்தில் காவலர் சட்டென்று அறைந்தார்.

இந்தக் காட்சி ரோட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியது. மேலும் இந்தக் காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் வரதராஜூ, முதியவரைத் தாக்கிய காவலர் யார் என்பதைக் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

மேலும் கவலர்கள் இந்த சிசிடிவி காட்சிகளை எடுத்து ஆய்வு செய்ததில் திருச்சி மாநகரம் உறையூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரியும் இளங்கோ என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் முதியவர் தன்னிடம் தகாத வார்த்தை பேசியதாலையே அவரை தாக்கியதாக காவலாளி கூறினார்.

இருந்தபோதிலும் உயரதிகாரி சீருடையில் இருந்துகொண்டு இது போன்ற செயலில் ஈடுபடுவது சட்டத்திற்கு புறம்பானது என்று கூறி அவரை திருச்சி மாநகரம் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்ய காவல் ஆணையர் வரதராஜூ உத்தரவிட்டார்.

Exit mobile version