Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருநங்கையிடம் தவறாக பேசிய காவல் அதிகாரி!

கோவையில் புகார் அளித்த திருநங்கை வீட்டிற்கு விசாரணை என்ற பெயரில் எல்லை மீறிய காவல் அதிகாரியின் அவச்செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை சேர்ந்த திருநங்கை ஒருவர் செல்போன் தொலைந்து போய்விட்டது என பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் புகாரை விசாரிக்க திருநங்கையின் வீட்டிற்கு வந்த காவல் அதிகாரி மூவேந்தன் வேல்பாரி(PC) தன்னை தரக்குறைவாக பேசியதாகவும், பாலியல் தொல்லை அளித்ததாகவும் அந்த திருநங்கை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமூகத்தில் மூன்றாம் பாலினத்தவராக உள்ள திருநங்கைகள் சிலரால் சமூகத்தில் அவப்பெயர் ஏற்படுகிறது . ஆனால் பலர் இந்த காவலரை போன்ற கெட்ட பார்வையுள்ளவர்களால் அவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.

நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் பாதுகாவலராக இருக்க வேண்டிய காவல் அதிகாரியே இப்படி திருநங்கைகக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரை போன்ற ஒரு சில தவறான காவல் அதிகாரியால் மொத்த காவல் அதிகரிக்கும் கெட்ட பெயர் ஆகிறது.

Exit mobile version