Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தப் பகுதிகளில் வன்முறை கும்பல் பட்டியலை வெளியிட்ட போலீசார்! மக்களே உஷார்!

The police released a list of violent gangs in these areas! People beware!

The police released a list of violent gangs in these areas! People beware!

இந்தப் பகுதிகளில் வன்முறை கும்பல் பட்டியலை வெளியிட்ட போலீசார்! மக்களே உஷார்!

பிரிட்டிஷ், கொலம்பியாவின் ஒருங்கிணைத்த படைகளின் சிறப்பு அமலாக்கு பிரிவினர் வான்கூவர் போலீசார் மற்றும் பிசி ராயல் கனடியன், மவுண்டட் காவல்துறையுடன் இணைந்து பொது எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த எச்சரிக்கையில் கனடாவில் வன்முறை கும்பலைச் சேர்ந்த 11 பேர் அடையாளம் கண்டறியப்பட்டதாகவும் அதில் ஒன்பது பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.

மேலும் அவர்கள் தீவிர கும்பல் வன்முறையில் தொடர்புடையவர்கள் என்றும் அவர்களின் அருகில் பொதுமக்கள் எவரும் இருக்க வேண்டாம் எனவும் தெரிவித்தனர். பொது பாதுகாப்பிற்கு வான்கூவர் போலீசார் மற்றும் பிசி ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறையுடன் இணைந்து மேலும் 11 நபர்களை அடையாளம் கண்டறிந்து வருகின்றார்கள். இந்த கும்பல் மோதல்  மற்றும் தீவிர அளவிலான வன்முறைகளுடன் தொடர்பு கொள்வதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது எனவும் தெரிவித்தனர்.

மேலும் இதைப்பற்றிய தகவல்கள் பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒருங்கிணைந்த படைகளின் சிறப்பு அமலாக்கு பிரிவு அவர்களின் டூவிட்டரின் மூலமாகதெரிவித்து வருகின்றனர். இந்த வன்முறையில் அடையாளம் காணப்பட்ட நபர்களின் மூலம் அருகாமையில் உள்ள மக்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் எனவும் போலீசாக தெரிவித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்கும்படியும் அறிவுறுத்தி வருகின்றனர்.

Exit mobile version