Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பேய்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!

குஜராத் மாநிலத்தில் விவசாயி ஒருவர் பேய்கள் தன்னை கொலை செய்வதாக மிரட்டுவதாகவும் போலீசில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னை வேலை செய்ய விடாமல் பேய்கள் தன்னை கொலை மிரட்டல் விடுப்பதாக விவசாயி ஒருவர் குஜராத் போலீசில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

குஜராத்தில் உள்ள பாஞ்ச்மஹல் என்ற மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தலை தெறிக்க காவல் நிலையத்திற்கு ஓடி வந்துள்ளார். இதைப் பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்த எதற்கு இப்படி ஓடி வருகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். பிறகு அவரை ஆசுவாசப்படுத்தி போலீசார் அவரிடம் என்ன ஆனது என்று வினவினர்.
அதற்கு அந்த விவசாயி சொன்ன பதில் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது.

அந்த விவசாயி தோட்டத்தில் என்னை வேலை செய்ய விடாமல் இரண்டு பேய்கள் தொடர்ந்து தொந்தரவு செய்வதாகவும், தன்னை கொலை செய்வதாக மிரட்டுவதாகவும் அவர் கூறினார்.

இதனால் மிகவும் அரண்டு போன போலீசார், என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டதற்கு, அந்த விவசாயி பேய்கள் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் என்று சொல்லியுள்ளார். அதனால் பேய்கள் பயந்து ஓடி விடும் என்று சொல்லியுள்ளார்.

போலீசார் எவ்வளவோ சொல்லியும் அந்த விவசாயி கேட்கவில்லை. பேய்கள் மீது எப்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவது என்று எவ்வளவோ விவசாயிடம் எடுத்துச் சொல்லியும் விவசாயக் ஏற்க மறுத்ததால் மிகவும் தொந்தரவு செய்ததால் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின் அவருடைய குடும்பத்தை அழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போதுதான் அந்த விவசாயிக்கு மனநலம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர் அவர் 10 நாட்களாக மாத்திரை சாப்பிடாமல் இருந்ததால் மறுபடியும் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால் எப்படி நடந்து கொண்டுள்ளார் என தெரியவந்தது

Exit mobile version