சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை ஆய்வு அறிக்கை!

0
103

விழுப்புரம் மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனையை ஆய்வு செய்த புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழுவை சார்ந்தவர்கள் தங்களுடைய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்துள்ள பெரியண்ணசூலுரை சேர்ந்தவர் ராமலிங்கம் இவருடைய மகள் ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த வந்தார். விடுதியில் தங்கி படித்த இவர் கடந்த மாதம் 13ஆம் தேதி அதிகாலையில் தரைதளத்தில் இறந்து கிடந்தார்.

இதனை தொடர்ந்து மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு கடந்த மாதம் 17ஆம் தேதி பொதுமக்கள் இளைஞர்கள் உள்ளிட்டோர் பள்ளியின் முன்பு கலவரத்தில் ஈடுபட்டார்கள். மாணவியின் இறப்பு குறித்து சின்ன சேலம் காவல் துறையினர் வழக்குப்பதிந்து பள்ளி தாளாளர் ரவிக்குமார் உட்பட 5 பேரை கைது செய்தனர்.

இந்து இந்த விரலுக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது இந்த நிலையில், மாணவி ஸ்ரீமதியின் உடல் கடந்த மாதம் 14ஆம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அதன் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் ஓய்வு பெற்ற தடய அறிவியல் நிபுணர் மற்றும் அரசு மருத்துவர்கள் 3 பேர் கொண்ட குழு முன்னிலையில், கடந்த மாதம் 19ஆம் தேதி மறு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் பிறகு மாணவி ஸ்ரீமதியின் 2 பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்வதற்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தடயவியல் துறை பேராசிரியர் மருத்துவர் அக்ஷய்குமார் சாகா தடயவியல் துறை தலைவர் மருத்துவர் சித்தார்த், தடையியல் துறை கூடுதல் பேராசிரியர் மருத்துவர் அம்பிகா பிரசாத், பத்ரா, உள்ளிட்டோர் அடங்கிய குழுவை சென்னை உயர் நீதிமன்றம் நியமனம் செய்தது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவினடிப்படையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழுவிடம் மாணவியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை சிபிசிஐடி காவல்துறையினர் ஒப்படைத்தனர். இதனை ஆய்வு செய்த ஜிப்மர் மருத்துவமனை குழுவை சார்ந்தவர்கள் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் அதற்கான அறிக்கையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில், நேற்று தாக்கல் செய்தனர். இதற்கு நடுவே ஸ்ரீமுதியின் தோழிகள் 2 பேர் நேற்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதியின் முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் வழங்கினர்.

அவர்கள் வழங்கிய இந்த ரகசிய வாக்கு மூலத்தில் பல்வேறு உண்மைகள் தெரிய வந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதோடு ஸ்ரீமதியின் உயிரிழப்பு கொலையா? தற்கொலையா? அவர் என்ன மாதிரியான மனநிலையிலிருந்தார்? எதனால் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டது? போன்ற பல்வேறு உண்மைகள் இந்த வாக்குமூலத்தில் தெரிய வந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.