திருமாவுக்கு துணை முதல்வர் பதவியை கேட்பதாக விசிக மாநில இளைஞரணி செயலாளர்
திமுக மற்றும் விசிக இடையேயான உட்கட்சி பூசல் இருந்து வந்தாலும் அவ்வாறு இல்லை என்று மழுப்பி தான் வருகிறது . இதற்கு உதராணமாக திருமாவளவனே ஓர் மேடையில் தலித் எப்பொழுதும் முதல்வராக முடியாது என்று கூறியிருப்பார். மேற்கொண்டு பூரண மதுவிலக்கு வேண்டுமெனவும் தமிழக அரசை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.
இதனையெல்லாம் தாண்டி தற்போது நடைபெற்ற எல்லோருக்குமான தலைவன் நிகழ்ச்சியில் விஜய் கலந்துக்க கொண்டதால் இவரை கலந்துக் கொள்ளக் கூடாது எனவும் அழுத்தம் கொடுத்து வந்தனர். இதனையடுத்து கூட்டணி கட்சிக்கு குள் திருமா – வுக்கான மவுசானது அதிகரித்துள்ளது. இதை வைத்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் 2026 ஆம் ஆண்டு வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் 20 முதல் 25 சீட் கேட்பதாக தெரிவித்துள்ளார்.
அதனை தாண்டி இளைஞரணி செயலாளர் சங்கத்தமிழன் இன்று தமியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் , நாம் தமிழகத்தின் மூன்றாவது கட்சியாக வளர்ந்துள்ளோம். அப்படி இருக்கையில் ஏன் அடுத்து எண்ணிக்கையை நிபந்தனையாக வைக்க வேண்டும் , அதற்கு பதிலாக தரத்தை உயர்த்த வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம், அதனால் வரப்போகும் தேர்தலில் கட்டாயம் திருமா – வுக்கு துணை முதல்வர் பதவியை தான் கேட்போம்.
அது தான் முக்கியம் எனக் கூறியுள்ளார். வன்னிய அரசு சட்டமன்ற தேர்தலில் 25 சீட் கேட்டபோதே திமுக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம் இதையெல்லாம் இப்போது பேசக் கூடாது, தேர்தலின் போது தான் பேச வேண்டும் என கூறினார். தற்போது துணை முதல்வர் பதவியே கேட்கும் போது திமுக பதிலடி என்னவாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்துள்ளனர்.