ஒரு அரிய மாம்பழத்தின் விலை 21000 ரூபாய் ! ஒரு கிலோ 2.7 இலட்சமாம்! உங்களுக்கு தெரியுமா?

0
143
The price of a rare mango is 21000 rupees! 2.7 lakh per kg! Did you know?

ஒரு அரிய மாம்பழத்தின் விலை 21000 ரூபாய் ! ஒரு கிலோ 2.7 இலட்சமாம்! உங்களுக்கு தெரியுமா?

மத்திய பிரதேச மாவட்டத்தில் ஒரு தோட்டத்தில் வித்தியாசமான மாம்பழம் ஒன்று உள்ளது. இதை யாரும் திருடி விடாமல் இருக்க 4 காவலர்களையும், 6 நாய்களையும் காவலுக்கு ஒரு குடும்பம் வைத்து உள்ளது. இந்த செய்தி உங்களுக்கு வித்தியாசமாக இருக்கிறதா? ஆனால் எத்தனை பழங்கள் என்றால் வெறும் 7 பழங்கள் தானாம்.

இந்த செய்தி மட்டும் அல்ல பழமும் வித்தியாசமானதுதான். பெயரும் வித்தியாசமானதுதான்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஜபால்பூர்  மாம்பழ தோட்டம் ராணி- சங்கல்ப் பரிஹார் என்ற தம்பதிகள் வைத்துள்ளனர். அவர்களுடைய பழத்தோட்டத்தில் தெரியாமல் பயிரிட்ட மாம்பழ மரக்கன்றுகள் ஜப்பானின் மியாசாகி மாம்பழங்களுக்கு சொந்தமானது என்பதை  அறிந்ததும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழங்களில் ஒன்றாக அறியப்படும்,  ஜப்பானின் மியாசாகி மாம்பழங்கள் சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன, அவை தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை விட அதிக அதிக விலைக்கு விற்கப்படுகின்றன என்றும் கூறுகின்றனர்.

இந்த மியாசாகி மாம்பழத்தின் விலை கிலோ 2.7 லட்சம் ரூபாய் வரை கடந்த ஆண்டு விற்பனை ஆகியும் உள்ளது.

தங்களது 7 மாம்பழங்களை திருடர்களிடமிருந்து காப்பாற்ற இந்த ஜோடி தங்கள் பழத்தோட்டத்தை  24 மணி நேரமும் பாதுகாப்பாக வைத்துள்ளனர். கடந்த ஆண்டு எங்கள் தோட்டத்தில் புகுந்த திருடர்கள் விலை உயர்ந்த ஜப்பான் வகை மியாசாகி மாம்பழத்தை திருடி சென்றனர்.

இந்தியாவில் இந்த மாம்பழம் அரிதினும் அரிதாக காய்க்குமாம். இதன் விலையும் சர்வதேச சந்தையில் அதிகமாம். அதனால் இந்த முறை மியாசாகி பழங்களை காக்கவே காவலுக்கு ஆட்களையும், நாய்களையும் தோட்டத்தில் வைத்துள்ளோம் எனவும் அவர் கூறினார்.

சென்னையில்  ஒரு ரெயிலில் பயணத்தின் போது ஒரு மனிதரை சந்தித்ததாகவும்  அப்போது அவர்களுக்கு அவர் அரிய ஜப்பானிய மா மரக்கன்றுகளை வழங்கியுள்ளார். ஆரம்பத்தில், தம்பதியினருக்கு இந்த மாம்பழ வகை குறித்து  தெரியாததால்,  மரக்கன்றுகளை கொடுத்தவரின்  தாயான தமினியின் பெயரால் இந்த மாம்பழங்களை அழைப்பதாகவும் கூறினார்.

இந்த மாம்பழ வகை குறித்து அறிந்த சில திருடர்கள் கடந்த ஆண்டு திருடி சென்று விட்டதால், இந்த ஆண்டு,  உஷாராக தம்பதியினர் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து உள்ளனர். இருவருக்கும் தங்கள் மாம்பழங்களை  விற்கும் திட்டம் இல்லை என்றும், விதைகளை அதிக மரங்களை வளர்க்கப் யன்படுத்துவோம் என்றும் கூறியுள்ளனர்.

ஜப்பானின் மியாசாகி மாம்பழங்கள் சிறப்பு தோற்றத்திற்கு பெயர் பெற்றவை. மாணிக்கங்களைப் போல சிவப்பு நிறத்தில் பளபளக்கும் இவை உலகிலேயே மிகவும் விலை உயர்ந்தவை. சர்வதேச சந்தையில் ஒரு கிலோவுக்கு ரூ .2.70 லட்சத்திற்கு விற்கப்படுகின்றன என்று ஜப்பானிய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூபி சிவப்பு நிறத்திற்கு ‘சூரியனின் முட்டை’ என்றும் ஒரு பொருளும் உள்ளதாம், அவ்வாறு அழைக்கப்படும் ஒவ்வொரு மாம்பழமும் தலா 21,000 ரூபாய் வரை விற்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.