ஆவினை தொடர்ந்து ஆரோக்கியா பால் விலை உயர்வு! அதிருப்தியில் சாமானிய மக்கள்!
திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பல பொருட்களின் விலை உயர்ந்து விட்டது. அந்த வகையில் ஆட்சிக்கு வந்ததும் பால் விலை 3 ரூபாயாக குறைத்து ஆணை பிறப்பித்தது. அதனை தொடர்ந்து பால் சம்பந்தப்பட்ட பொருட்களின் அனைத்து விலையையும் உயர்த்தினர். அதனைத் தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு சில தினங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர்.
அவர்கள் போராட்டத்தையடுத்து தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி உத்தரவிட்டது. அந்த வகையில் பால் கொள்முதல் விலை ரூ 32 இருந்து 35 ஆக உயர்த்தினர். அதுவே எருமைப்பால் விலையை 41 லிருந்து 45 ஆக உயர்த்தினர். இதனை தொடர்ந்து ஆவின் பாலகம் விநியோகிக்கும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை 52 இல் இருந்து தற்போது 62 ஆக உயர்த்தி உள்ளனர்.
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் ஹட்சன் நிறுவனமும் தனது பாலின் விலையை உயர்த்தியுள்ளது. ஆரோக்கியா ஆரஞ்சு பாக்கெட்டின் விலை தற்போது நிர்ணயித்த விலையை விட ஐந்து ரூபாய் உயர்த்தி உள்ளது. மேலும் ஆரோக்கியாவில் கேனில் விற்கப்படும் பாலின் விலை நூறாக இருந்த நிலையில் தற்போது 15 ஆக உயர்த்தியுள்ளனர். ஆவின் விலை உயர்த்திய நிலையில் அதனை தொடர்ந்து ஆரோக்கியாவும் விலை உயர்த்தியுள்ளது. மக்கள் மத்தியில் இது அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது.