Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொடர்ந்து உயரும் தங்கம் விலை!! இன்றைய விலை எவ்வளவு தெரியுமா!!

The price of gold continues to rise!! Do you know how much is the price today!!

The price of gold continues to rise!! Do you know how much is the price today!!

Gold News: தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தை நோக்கி செல்கிறது. அந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு பவுனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் வேதனையில் உள்ளார்கள். தங்கம் விலை கடந்த மாதம் 30-ஆம் தேதி ரூ.59,000-த்தை தாண்டி வரலாறு காணாத அளவிற்கு உச்ச நிலையை அடைந்தது. இது நகை பிரியர்களுக்கு மிகுந்த வேதனையை அளித்தது.

அந்த நிலையில் தங்கம் விலை இந்த வாரத்தில் இருந்து சற்று உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 மற்றும் ஒரு பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.56,920 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையில் எந்த ஒரு மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் கடந்த மூன்று நாட்களில் மற்றும் ஒரு சவரனுக்கு ரூ.1,440 அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் விலை மீண்டும் ரூ.57,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.56,520-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்படி தங்கம் விலை உயர்ந்து வருவதை பார்த்து மக்கள் மிக வேதனையில் உள்ளார்கள். இதனால் மீண்டும் தங்கம் விலை குறையுமா என நகை பிரியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Exit mobile version