Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கேஸ் சிலிண்டரின் விலை ரூ250 மற்றும் ரூ 575:! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

கேஸ் சிலிண்டரின் விலை ரூ250 மற்றும் ரூ 575:! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

இன்று முதல் ரேஷன் கடையில் புதிய திட்டம் அமலுக்கு வருவதாக கூட்டுறவு துறை
அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதன்படி தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அக்டோபர் ஆறாம் தேதியான இன்று 5 கிலோ மற்றும் 2 கிலோ எடை உள்ள சிலிண்டர் விற்பனை செய்யப்படும் திட்டம் அமலுக்கு வர இருக்கிறது.

அதாவது இத்திட்டத்தை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள
டியுசி எஸ் எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில் இன்று இந்த விற்பனை முதலில் துவக்கப்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டம் விரிவாக்கப்படும் என்று கூட்டுறவு துறை வட்டாரங்கள் அறிவித்துள்ளனர்.

இந்த ஐந்து கிலோ மற்றும் இரண்டு கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் ரேஷன் கடையில் பெற வேண்டும் எனில் முதலில் 2 கிலோ கேஸ் சிலிண்டரை பெற 958 மற்றும் 5 கிலோ கேஸ் சிலிண்டரை பெற 1515 ரூபாய் கட்ட வேண்டும்.
அதன் பிறகு வாங்கும் சிலிண்டர்களுக்கு 2கிலோ எடை உள்ள சிலிண்டருக்கு ரூ 250 மற்றும் 5 கிலோ எடையுள்ள சிலிண்டருக்கு 575 மட்டும் செலுத்தினால் போதும்.

Exit mobile version