Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தங்கம் விலை போல் பட பட வென உயரும் தக்காளி விலை!.அதிர்ச்சியில் உறைந்து போன இல்லத்தரசிகள்!.

தங்கம் விலை போல் பட பட வென உயரும் தக்காளி விலை!.அதிர்ச்சியில் உறைந்து போன இல்லத்தரசிகள்!.

 

சென்னையின் பிரதான காய்கறி சந்தையான கோயம்பேட்டுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் மற்றும் பழங்கள் வரவழைக்கப்படுகின்றன. இதனால் பெருமளவு காய்கறி வரத்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களையே நாம் சார்ந்து இருக்கிறோம். இதனால் அண்டை மாநிலங்களில் மழை, வெள்ளம் போன்ற பாதிப்புகளுக்கு தள்ளப்பட்டு வருகின்றார்கள்.இந்த பாதிப்பு ஏற்படும்போது அதன் எதிரொலி காய்கறி வரத்திலும் பாதிப்பது இயல்பு.அவ்வகையில் தற்போது தக்காளி விலையில் இந்த பாதிப்பு எதிரொலித்து இருக்கிறது. இதனால் தக்காளியின் விலை மலமல வென உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்க தலைவர் எம்.தியாகராஜன் கூறப்படுவது,பொதுவாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினந்தோறும் 65 லாரிகள் வரை தக்காளி இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அண்டை மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் தக்காளி வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் 40 முதல் 45 லாரிகள் வரை மட்டுமே சரக்குகள் வருகின்றன. இதனால் ரூபாய் 20 முதல் ரூபாய் 25 வரை விற்பனையான ஒரு கிலோ தக்காளி தற்போது ரூபாய் 60 வரை விற்பனையாகிறது. இப்போதுள்ள சூழலில் தக்காளியை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி கோயம்பேட்டுக்கு விற்பனைக்கு எடுத்து வருகிறோம். அண்டை மாநிலங்களில் மழை நீடிக்கும் பட்சத்தில் தக்காளி விலை இன்னும் உயர வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.அவர் கூறியதை தொடர்ந்து மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள்.

Exit mobile version