திடீரென்று சரிந்த தக்காளியின் விலை! குமுறும் விவசாயிகள்! கிலோ 8 ரூபாய் தானா?

0
217
The price of tomatoes suddenly fell! Grumpy farmers! 8 rupees per kg?
சமையல்கட்டில் இன்றியமையாத பொருளாக கருத்தப்படும் தக்காளியின் விலை கிலோ 8 ரூபாய்க்கு சென்றுள்ளதால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
நம்முடைய வீட்டின் சமையல்கட்டில் தக்காளி இல்லாமல் சமையலே இருக்காது. அந்த அளவுக்கு முக்கியமான பொருளாக தக்காளி இருக்கின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தக்காளியின் விலை தங்கம் போல அதிகரித்து பெண்கள் நடும் சிரமத்தை சந்தித்தனர்.
அனைவரும் தக்காளியை தங்கம் போல பாதுகாத்து வந்தனர். மேலும் தகவல்களுக்கு பதிலாக தக்காளி சாஸ் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்து வந்த நிலையில் தமிழகத்தில் தக்காளியின் தேவையை சரி செய்யும் விதமாக தமிழக அரசு பல முயற்சிகளை எடுத்தது.
அதன் பின்னர் தக்காளியின் விலை சிறிது நாட்களுக்கு பின்னர் குறைந்தது. இதையடுத்து மீண்டும் சில நாட்களுக்கு முன்னர் தக்காளியின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் வரை சென்ற நிலையில் அதுவும் படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்நிலையில் தற்பொழுது தக்காளியின் விலை ஒரே அடியாக குறைந்துள்ளது விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
அதாவது கடந்த மாதம் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி கடந்த வாரம் கிலோ 34 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதற்கு காரணம் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகமாக இருப்பது தான். மேலும் தக்காளி வரத்து அதிகமாகிக் கொண்டே இருப்பதால் தற்பொழுது தக்காளியின் விலை கடந்த வாரத்தைவிட மிகவும் அதள பாதாளத்திற்கு சென்று விட்டதாம்.
அதாவது தினமும் சந்தைக்கு தக்காளி டன். கணக்கில் கொண்டு வரப்படுவதால் சந்தையில் இருப்பவர்கள் 14 கிலோ எடை கொண்ட ஒரு தக்காளி பெட்டியை 100 ரூபாய் முதல் 200 வரையிலே வாங்குகிறார்களாம். அதாவது ஒரு கிலோ தக்காளி 8 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரையில் மட்டுமே வாங்குவதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த திடீர் விலை சரிவு விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் தக்காளி பறிப்பு செலவுக்கு கூட பணம் கிடைக்காமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் தக்காளிக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காத காரணத்தினால் தக்காளிகளை கீழே போட்டுவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தக்காளியின் கடுமையான விலைச்சரிவுக்கு தமிழக அரசு எதாவது தகுந்த தீர்வு காண வேண்டும் என்று தக்காளியை பயிரிடும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.