இன்று இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர்! முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு!

0
171

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற நாள் முதல் உலக நாடுகளிடையே இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது.உலகளவில் எந்த ஒரு முக்கிய முடிவை மேற்கொள்ள வேண்டுமென நினைத்தாலும் அதற்கு இந்தியாவின் மனநிலை என்ன என்பதை உலக நாடுகள் அறிவதற்கு தற்சமயம் ஆவலாக இருந்து வருகிறார்கள்.

அந்தளவிற்கு உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது.இதற்கு முக்கிய காரணம் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு உலக நாடுகளிடம் அவர் நட்பு பாராட்டும் விதம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

உலக நாடுகளிடம் அவர் வாஞ்சையாக பழகி உலக நாடுகளிடம் நட்பை வளர்த்து வருகிறார். அதன் காரணமாக, இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

இதற்கிடையில் சமீபத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களை இந்தியாவிற்கு வரவேண்டும் என்று அங்கு சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

அவருடைய அழைப்பை ஏற்றுக்கொண்ட போரிஸ் ஜான்சன் இந்தியாவிற்கு நிச்சயமாக வருவதாக கூறியிருந்தார். அதனடிப்படையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று 2 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வருகிறார்.

லண்டனிலிருந்து புறப்படும் அவர் குஜராத் மாநிலம் ஆமதாபாத் இன்று வருகை தருகிறார். அங்கே முதலீடு மற்றும் வர்த்தகம் தொடர்பான விவரங்களை கவனிக்கிறார்.

அங்கு இருக்கின்ற பல்கலைக்கழகத்திற்கு செல்லவிருக்கிறார். அதோடு சில கலாச்சார இடங்களையும் பார்வையிட போரிஸ் ஜான்சன் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

மேலும் நாளைய தினம் தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார், தொழிலதிபர்களையும் அவர் சந்தித்துப் பேசுகிறார். அவருடைய இந்த பயணம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதோடு அவர் இந்தியாவிற்கு புறப்படுவதற்கு முன்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றினார் என சொல்லப்படுகிறது.

அப்போது பேசிய அவர், இந்தியாவின் அழைப்பின்பேரில் ஆமதாபாத்துக்கும், டில்லிக்கும், செல்கிறேன். என்னுடைய இந்த பயணத்தால் இரு நாடுகளுக்குமிடையிலான மூலோபாய வர்த்தக உறவுகள் மற்றும் மக்களுக்கும் மக்களுக்கிடையிலான உறவு வலுபெறும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பேன், இங்கிலாந்தில் முதலீடு செய்யும் இந்திய தொழிலதிபர்களை சந்திப்பேன் என தெரிவித்திருக்கிறார். மேலும் முதலீடுகளை பார்வையிடுவேன் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்

அத்துடன் போரிஸ் ஜான்சனுடன் வருகைதரும் அவருடைய செய்தி தொடர்பாளர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, பிரதமரின் இந்திய பயணம் உக்ரைன் மற்றும் ரஷ்யா நெருக்கடியில் கட்டமைக்கப்படவில்லை.

இந்த பயணம் வெளிப்படையானது தான் அதோடு முக்கியமானது என்று தெரிவித்திருக்கிறார். இந்த பயணம் மிக நீண்டகாலமாக திட்டமிட்ட பயணம் என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்தியா எங்களுக்கு நல்லதொரு முக்கிய கூட்டாளி நாடாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலீடு வர்த்தகம் பாதுகாப்பு மற்றும் பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் உண்மையை உருவாக்குவதற்காக இந்த பயணத்தை இங்கிலாந்து பிரதமர் மேற்கொள்ள விரும்புகிறார் என்று அவர் கூறியிருக்கிறார்.

இவை அனைத்தையும் விவாதித்தோம் ரஷ்யா மற்றும் உக்ரைன் விவகாரம் பேச்சில் இடம்பெறும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயத்தில் இது இந்தியா ஒரு சார்பு நிலைப்பாட்டை எடுக்க நாங்கள் வற்புறுத்த மாட்டோம். ஒரு முக்கியமான சர்வதேச கூட்டாளியாக ஆக்கப்பூர்வமாக ஒன்றிணைந்து செயல்பட நாங்கள் முயற்சி செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு பிரதமர்களுக்கிடையே கதவுகளை மூடிக்கொண்டு நடத்துகின்ற விவாதத்தில் இந்த விவகாரம் ஆதிக்கம் செலுத்துமா? என்று கேட்டால் அதற்கான பதில் இது போல தலைப்பிலான விவாதங்களில் ஒன்றாக இருக்கும் என்பதுதான்.

ஆகவே வெளிப்படையாகவே ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் இந்த சமயத்தில் இங்கிலாந்துக்கு மிகப்பெரிய முன்னுரிமை பிரச்சனையாகும். இது உலகளாவிய பிரச்சனையும் கூட பொருளாதாரத்தில் எண்ணெய் சந்தையில் சர்வதேச பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இது பேச்சில் இடம்பெறும் என்றும் கருதப்படுகிறது.

தாராள வர்த்தக ஒப்பந்தம் குறித்து இரு நாடுகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு உடன்பாட்டை எட்ட திட்டமிட்டிருக்கின்றனர். இது ஒரு நிலையான காலக்கெடு இல்லை நாங்கள் அவசரப்பட மாட்டோம்.

இரு நாடுகளுக்குமிடையே ஒரு நல்ல ஒப்பந்தத்தை ஏற்படுத்த எவ்வளவு காலம் இருக்குமோ அவ்வளவு காலத்தை நாங்கள் எடுத்துக் கொள்வோம். என்று போரிஸ் ஜான்சனின் செய்தி தொடர்பாளர் கூறி இருக்கிறார்.