Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதல்வரின் அதிரடி உத்தரவு! மின் விநியோக புகார்கள் உடனடி நடவடிக்கை!

முதல்வரின் அதிரடி உத்தரவு! மின் விநியோக புகார்கள் உடனடி நடவடிக்கை!

தமிழக அரசு தற்போது செய்தி குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பு சென்னை அண்ணாச்சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மைய மின்னகம் செயல்பட்டு வருகின்றது. மேலும் முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று அந்த மின்னகத்தை ஆய்வு செய்தார்  புகார் அளித்தவர்களின் 10 லட்சம் ஆவது நுகர்வோரான சுவாமிநாதன் என்பவரின்மின்னகத்தில் லிருந்து  கைபேசி மூலமாக முதல்வர் மு க ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது பொதுமக்களின் அழைப்புகளை ஏற்று குறைகளை கேட்டிருந்த உடனடியாக நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மின்னக சேவை கடந்த ஆண்டு ஜூன் 20ஆம் தேதி முதல்வர் மு க ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்நிலையில் 94987 94987 என்ற எண்ணில் பொதுமக்கள் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது, இந்நிலையில் மின்விநியோகத்தில் தடை விகித பட்டியலில் மாற்றம் மின் கட்டணத்தில் உள்ள சந்தேகங்கள் உள்ளட்ட அனைத்துவித புகார்களையும் அந்த எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும் கூறினார்கள்,

மேலும் மின்னகத்தில் நேற்று முன்தினம் வரையிலான காலத்தில் பத்து லட்சத்தி ஐம்பதாயிரம் பேர் புகார் அளிக்கப்பட்டனர். மேலும் அவற்றில்  10 லட்சத்து 41 ஆயிரம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது எனவும் தெரிவித்தார். மேலும் மின்னகத்திற்கு வரும் பொதுமக்கள் அழைப்புக்கு குறுஞ்செய்தி மூலம் ஒப்புகை அளிப்பதோடு குறைகளை தீர்வு காண்பதுடன் அது குறித்து பொதுமக்களிடம் கைப்பேசி வாயிலாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மேலும் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் தொகுதி வாரியாக நியமிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும் அமைச்சர்கள் அல்லது சட்டப்பேரவை உறுப்பினர்களை தொடர்பு கொண்டு பொதுமக்களின் தேவை மற்றும் அவர்களின் குறை நிறைகளை கேட்டு அறிந்து உடனடியாக சரி செய்வதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அந்த ஆய்வின் போது அமைச்சர்கள் கா.பொன்முடி வீ .செந்தில் பாலாஜி எரி சக்தி துறை கூடுதல் தமிழ்நாடு செயலாளர் ராமேஷ்சந்த்  மீனா தமிழ்நாடு மின்சார வாரியம் தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version