Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நயன்தாரா ரம்யா கிருஷ்ணன் மற்றும் சச்சினின் மனைவி ஆகியோரிடம் 8 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றிய தனியார் நிறுவனம்

முறைகேடான, ஆதாரங்கள் அற்ற நிலத்தினை வாங்கி நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் சச்சினின் மனைவி அஞ்சலி ஆகியோர் ஏமாந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தின் பகுதியில் உள்ள ராவிர்யால் ஏரிக்குச் சொந்தமான நிலத்தினை நயன்தாரா, ரம்யாகிருஷ்ணன் மற்றும் சச்சினின் மனைவி அஞ்சலி ஆகியோருக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் ரியல் எஸ்டேட், மற்றும் கட்டுமான நிறுவனம் ஏமாற்றி விற்றுள்ளது.

 

The private company that defrauded Nayanthara, Ramya Krishnan and Sachin's wife of over Rs 8 crore.
The private company that defrauded Nayanthara, Ramya Krishnan and Sachin’s wife of over Rs 8 crore.

இதனை அவர்கள் மூவரும் எட்டு கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து வாங்கியதாகவும், அதில் தனியாக அப்பார்ட்மெண்ட் கட்டுவதாகவும் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

The private company that defrauded Nayanthara, Ramya Krishnan and Sachin's wife of over Rs 8 crore.

இதில் 6 ஏக்கர் நிலம் சச்சினின் மனைவிக்கும், நயன்தாரா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரும் தல ஒரு ஏக்கர் வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

இதில் நிலத்தினை இவர்களுக்கு விற்ற அந்த தனியார் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு இடையே நடந்த மோதலால் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும் இது குறித்து அந்த நிறுவனத்தின் இயக்குனர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Exit mobile version