எடப்பாடிக்கு வந்த சிக்கல்! பன்னீர்செல்வம் தரப்பு மகிழ்ச்சி!!
அதிமுகவில் கடந்த வருடம் கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனை உருவெடுக்க தொடங்கிய போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடிக்க தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் அதிமுகவின் பொதுக்குழு கூடியது, அந்த பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி தரப்பு கோரிக்கை வைத்தது.
இதனை தொடர்ந்து கூட்டத்தை விட்டு பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறியதை அடுத்து பொதுக்குழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் அன்றைய தினம் அதிமுக தலைமை அலுவலகத்தை பன்னீர் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கி அங்கிருந்த பொருட்களை சூறையாடினர்.
பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர் பன்னீர்செல்வம் தரப்பினர். அதன் பின் பலமுறை வழக்கு தொடுத்தும் அனைத்திலும் எடப்பாடி வெற்றி வாகை சூடினார். இதனிடையே கட்சி அலுவலகத்தில் சூறையாடப்பட்ட பொருட்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என எடப்பாடி தரப்பு கூறிய நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரதான வழக்கு தீர்ப்புக்கு பிறகு கட்சி அலுவலகத்தின் உரிமையாளர் என்று முடிவு செய்யப்படும் என நீதிமன்றம் கூறியது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினால் பன்னீர்செல்வம் தரப்பினர் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளதால் பிரதான வழக்கில் வெற்றி கிடைக்கும் என நம்புவதாக பன்னீர் செல்வம் நம்பிக்கையுடன் உள்ளதாகவும், அதே சமயத்தில் எடப்பாடிக்கு கட்சி அலுவலக வழக்கில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது அவருக்கு ஒரு சிக்கலாக பார்க்கப்படுகிறது என அரசியல் பேச்சாளர்கள் கூறுகின்றனர்.