பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பு பிரச்சனை!!! இதை சரி செய்ய சில இயற்கையான வழிமுறைகள் இதோ!!!
பெண்களின் பிறப்பு உறுப்பில் ஏற்படும் அரிப்பு பிரச்சனையை குணப்படுத்த சில இயற்கையான வழிமுறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
பெண்களின் பிறப்புறுப்பில் வறட்சி இருந்தாலோ, பி.ஹெச் அளவு குறைவாக இருந்தாலோ, எதாவது தொற்று இருந்தாலோ அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பு பிரச்சனையை குணப்படுத்த உதவும் வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பெண்களின் பிறப்பு உறுப்பில் ஏற்படும் அரிப்பு தடுக்கும் வழிமுறைகள்…
* பெண்களின் பிறப்பு உறுப்பில் ஏற்படும் அரிப்பு தடுக்க வேப்பிலையை மருந்தாக பயன்படுத்தலாம். அதாவது வேப்பிலையை தண்ணீரில் போட்டு காய்ச்ச வேண்டும். பின்னர் இந்த தண்ணீரை ஆற வைக்க வேண்டும். இந்த தண்ணீர் ஆறிய பிறகு வேப்பிலை தண்ணீரை கொண்டு பிறப்புறுப்பை கழுவ வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது பிறப்புறுப்பில் தங்கி உள்ள கிருமிகள், பாக்டீரியாக்கள் அழிந்து விடும்.
* பெண்களின் பிறப்பு உறுப்பில் ஏற்படும் அரிப்பை குணப்படுத்த கற்றாழையை பயன்படுத்தலாம். அதாவது கற்றாழை ஜெல்லை பிறப்பு உறுப்பில் தடவி வருவது மூலமாக அரிப்பு குணப்படுத்தலாம். கற்றாழை ஜெல் வறட்சியை தடுத்து ஈரப்பதத்தை கொடுக்கும். அதோடு கற்றாழை ஜெல் பூஞ்சைகளை அழித்து விடுகின்றது.
* பெண்களின் பிறப்பு உறுப்பில் ஏற்படும் அரிப்பு பிரச்சனையை குணப்படுத்த பூண்டு பயன்படுத்தலாம். அதாவது பூண்டை தட்டி அதில் விட்டமின் இ மாத்திரையின் ஆயிலை கலந்து பிறப்பு உறுப்பில் தேய்க்க வேண்டும் இதை தொடர்ந்து செய்து வந்தால் அரிப்பு பிரச்சனை நீங்கும்.
* தேங்காய் எண்ணெயை பிறப்பு உறுப்பில் தேய்த்து வருவதன் மூலமாகவும் பிறப்பு உறுப்பில் ஏற்படும் அரிப்பு பிரச்சனையை குணப்படுத்தலாம்.
மேலும் இனிப்பு வகைகளை அதிகமாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. கழிவறை சென்று வந்த பின்பும் குளித்து முடித்த பின்பும் பிறப்பு உறுப்பில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இறுக்கமான உள்ளாடைகளை அணிவதை தவிர்க்கலாம். காட்டன் உடைகளை பயன்படுத்தலாம்.