Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காரில் மதுபானம் கடத்திய பிரபல தயாரிப்பாளர் போலீசாரிடம் பிடிபட்டார்!!

கொரோனாத் தொற்று பரவுதலின் விரியத்தின் காரணமாக அவசியமின்றி வாகனங்கள் சாலையில் செல்வோரை கண்காணிக காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.விதிகளை மீறி வரும் வாகனங்களை பறிமுதலும் செய்து வருகின்றனர்.

பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுந்தரவதனம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது காரின் முன்பகுதியில் போலீஸ் என ஸ்டிக்கரை ஒட்டியபடி வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர்.

அப்பொழுது அந்த காருக்குள் விலையுயர்ந்த மதுபான பாட்டில்கள் இருப்பதை கண்டு மேலும் விசாரித்த போலீசார் இவர் தாதா பட தயாரிப்பாளர் என்பதும் விசாரணையில் ஓய்வு போலீஸ் அதிகாரி ஒருவரின் தூரத்து சொந்தகாரர் என்பதும், ஒய்வு பெற்ற போலிஸ் அதிகாரிக்கு தெரியாமல் காரில் மதுபானம் கடத்தியது தெரியவந்தது.

மேலும் இவரும் இவருடைய நண்பரும் சேர்ந்து மதுபானம் விற்க முயன்றதாகவும் விசாரணையில் தெரியவந்தது.இதனைஅடுத்து விலை உயர்ந்த மது பாட்டிலையும் மதுபாட்டில் வைத்துச் சென்ற காரையும் பொலீசார் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version