Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கல்லூரி மாணவிகளின் ஆடைகளை களைய சொன்ன பேராசிரியர்!! நீண்டகால விசாரணைக்கு பின் எடுக்கப்பட்ட நடவடிக்கை!!

கல்லூரி மாணவிகளின் ஆடைகளை களைய சொன்ன பேராசிரியர்!! நீண்டகால விசாரணைக்கு பின் எடுக்கப்பட்ட நடவடிக்கை!!

கல்லூரியில் படித்து வந்த மாணவிகள் 11 பேரின் மேலாடையை களையும்படி கூறிய பேராசிரியருக்கு மூன்று ஆண்டு விசாரணைக்கு பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் தக்கோமா என்ற பகுதியில் மோன்ட்கோமெரி என்ற கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் ஒரு பேராசிரியர் அங்கு படித்த மாணவிகள் 11 பேரின் மேலாடையை கழட்டும்படி கூறியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சில்வர் ஸ்பிரிங் என்ற கேம்பஸ் பகுதியில் மாணவிகளின் மேலாடையை கழட்டி விட்டு விளையாட்டுக்கான உள்ளாடையுடன் மட்டும் இருக்கும்படி அவர் வலியுறுத்தி உள்ளார்.

அத்தோடு அவர் இல்லாமல் மாணவிகளின் மார்பகங்களை பற்றி முறையற்ற விமர்சனங்கள் தெரிவித்துள்ளார். இதைப் பற்றி விசாரித்த போது அது மருத்துவ ஆய்வுடன் தொடர்புடையது எனக் கூறியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் அப்போது ஆடைகளை களைய வேண்டிய அவசியமோ தேவையோ இல்லாத போது அவர் ஆடைகளை கழட்ட சொன்னது மட்டுமில்லாமல் தேவையற்ற சர்ச்சை ஏற்படும் வகையில் விமர்சனங்களை பேசி நடந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைப் பற்றி கல்லூரியில் புகார்கள் தெரிவித்த நிலையில் 3 ஆண்டுகள் துறை ரீதியான விசாரணை நடந்து வந்தது. இதில் கடந்த மூன்று மாதமாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் இந்த விபரங்கள் தெரிய வந்து உள்ளன.

அதில் சில மாணவிகள் ஆய்வகத்தில் அணியும் மேலாடையை அணிந்து இருந்ததாகவும் அவர்களையும் அவர் கழட்ட சொன்னதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பேராசிரியர் விசாரணைக்கு பின்னர் விடுமுறை அளிக்கப்பட்டு பின்னர் பணியிலிருந்து முழுமையாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரது பெயர் உள்ளிட்டு விவரங்கள் எதுவும் கல்லூரி நிர்வாகத்தால் வெளியிடப்படவில்லை.

Exit mobile version