Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுகவின் மக்கள் விரோத போக்கை கண்டித்து போராட்டத்தில் இறங்க தயாராகும் பாட்டாளி மக்கள் கட்சி!

சென்னையில் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படும் என்று மத்திய, மாநில, அரசுகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். புதிய விமான நிலையத்திற்காக 5000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில். திமுகவிற்கு நெருக்கடி கொடுப்பதற்கு பரந்தூர் விவகாரத்தை கையில் எடுப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சியை திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சேலம், சென்னை, எட்டு வழி சாலை, நெய்வேலி என்எல்சி நிறுவன விரிவாக்கத்திற்கு நிலம் எடுப்பது, உள்ளிட்ட மக்கள் விரோத போக்கை யார் கடைபிடித்தாலும் அவர்களுக்கு எதிராக முதலில் குரல் கொடுத்து வருவது பாட்டாளி மக்கள் கட்சி தான்.

அந்த வகையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பை கண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அந்த கட்சியின் தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் போராட்டங்களை முன்னெடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பரந்தூர் மக்கள் மத்திய மாநில அரசுகளின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், அவர்களிடம் இன்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கருத்து கேட்க முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்காக அரங்க கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிவரும் மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர்களுக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சியும் பாராட்டத்தில் இறங்குவதற்கான வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

Exit mobile version