கன்னியாகுமரி மாவட்டத்தில் சொத்து பத்திரத்தை வைத்து வட்டிக்கு பணம்வாங்கி கொரோனாவால் வட்டி பணம் செலுத்த முடியாததால் சொத்தை ஜப்தி செய்ய வந்த அதிகாரிகள் காலில் விழுந்து கதறிய குடும்பம், மகனின் துயரை தாங்க முடியாமல் தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தக்கலை அருகே கொல்லன்விளை பகுதியை சேர்ந்த குமாரசுவாமி இவர் தக்கலை தேசிய நெடுஞ்சாலை புலியூர்குறிச்சி பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் கார் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.தொழில் சம்மந்தமாக ஒர்க்ஷாப் இருக்கும் இடத்தின்பத்திரத்தை வீட்டின் அருகே வசித்துவரும் ஐயப்பன் என்வரிடம் அடமானம் வைத்து ரூ8. லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் வாங்கிய பணத்திற்கு முறையாக வட்டி செலுத்த முடியாததால். ஐயப்பன் கோர்ட் உத்தரவுபடி, தக்கலை போலீசார் பாதுகாப்புடன் நிலத்தை கையகப்படுத்த முயன்ற போது, ஒர்க்ஷாப் குமாரசுவாமி அவரது தாய், மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தார் அதிகாரிகளிடம் கண்ணீர் மல்க வஞ்சிக்கப்பட்டதாக முறையிட்டனர்.
இந்நிலையில் குமாரசுவாமி தாயார் ரமணி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது தக்கலை சப் இன்ஸ்பெக்டர் அஷாஜெபகர் முதாட்டியை தரதரவென்று இழுத்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வட்டிக்கு பணம் வாங்கி வஞ்சிக்கப்பட்டதாக ஒரு குடும்பமே நடு ரோட்டில் கண்ணீர் மல்க கதறிய சம்பவம் காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.