Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குழம்பில் காரமில்லாத  காரணத்தால் மனைவியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ கணவன்!.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்..

The psycho husband brutally killed his wife because of the lack of salt in the broth!.. Shocking information coming out.

The psycho husband brutally killed his wife because of the lack of salt in the broth!.. Shocking information coming out.

குழம்பில் காரமில்லாத  காரணத்தால் மனைவியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ கணவன்!.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்..

பெங்களூருவை அடுத்த புறநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் இந்த தம்பதிகள்.கணவன்  சுரேஷ் இவருடைய வயது 48. அவருடைய மனைவி ஷாலினி வயது 42. இருவரும் நன்றாக குடும்பம் நடத்தி வந்திருந்தனர்.சுரேஷ் அவ்வப்போது மது அருந்துவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது தன் மனைவியிடம் சிக்கன் கபாய் செய்து தருமாறு கூறியிருக்கிறார். மனைவியோ கணவன் கூறியபடி சிக்கன் கபாய் செய்து கொடுத்துள்ளார். நன்றாக வாங்கி சாப்பிட்ட சுரேஷ் திடீரென்று காரம் குறைவாக இருப்பதாக கூறி சண்டையிட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சுரேஷ் ஷாலினியை உருட்டு கட்டையால் தாக்கியிருக்கின்றார். மேலும் அருகில் உள்ள கத்தியை எடுத்து ஷாலினியை குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்தால் ஷாலினி ரத்த வெள்ளத்தில் வலி தாங்காமல் கத்தியுள்ளார்.கதறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து காவல்துறையினருக்கு தகவலும் தெரிவித்தனர். இதனிடையே தனது மனைவியை கணவரே கொலை செய்தவன்  என்ற சொல் நாளை வரும் என  குற்ற உணர்ச்சியில் இருந்துள்ளார். அப்போது காவல்துறையினரிடம் மாட்டி விடக் கூடாது என்ற எண்ணத்தில் தானே ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version