டிஜிபி மீது புகார் அளித்த பொதுமக்கள்! அபராதம் விதித்து தீர்ப்பு! 

0
210
The public who complained about the DGP! Penalty and judgment!

டிஜிபி மீது புகார் அளித்த பொதுமக்கள்! அபராதம் விதித்து தீர்ப்பு!

போக்குவரத்து புதிய விதிமுறைகளை அமல்படுத்தி தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை பிறப்பித்தது.இனி இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மது அருந்தி வாகானம் இயக்க கூடாது.அதுமட்டுமின்றி அவர்களுக்கு பின்னால் அமர்ந்திருப்பவர்களும் மது அருந்திருக்க கூடாது என புதிய விதிமுறைகளை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தலைகவசம் அணியாதவர்களுக்கு ரூ 1000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆங்காங்கே கேமராக்களை நிறுவி ,கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து அதற்கான ரசீது சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளின் வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்படுகின்றது.மேலும் போக்குவரத்து விதிமீறல்களை பொதுமக்கள் படம் பிடித்து போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கு கொண்டு சென்றால் அதன் அடிப்படையில் சமந்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி மூன்று நட்சத்திரம் உள்ள காவல் துறை உயர் அதிகாரியின் வாகனம் ஒன்று திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் எதிரே ஒருவழிப் பாதையில் எதிர் திசையில் சென்றது.அதனை பொதுமக்கள் ஒருவர் புகைப்படம் எடுத்து சென்னை காவல் துறையின் ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்து புகார் அளித்தனர்.

மேலும் இது குறித்து விசாரணை நடத்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.அந்த உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.அப்போது அந்த விசாரணையில் அந்த வாகனம் ஐபிஎஸ் அதிகாரியான ரயில்வே கூடுதல் டிஜிபி வனிதாவிற்கு ஒதுக்கப்பட்டது என்பது தெரியவந்து.இதனையடுத்து போக்குவரத்து விதிமீறல் செய்ததும் தெரியவந்தது.அந்த வாகனத்திற்கு ரூ 500 அபராதம் விதிக்கப்பட்டது.புகார் கொடுத்தவருக்கு இந்த தகவலை பதிலாக அளித்து காவல் துறை ட்விட் செய்துள்ளது.