ரவுடியை கல்லால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்! பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்டதா?
தற்போது சில சினிமாவில் வரும் பழிவாங்கும் காட்சிகள் நிஜவாழ்வில் நடந்து வருகிறது. அந்தவகையில் நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகிலுள்ள கிராமம் தான் செங்குளம். இந்த கிராமத்தை நாட்டாமை மற்றும் பஞ்சாயத்து தலைவர் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் மேலும் மக்களின் வளர்ச்சி மீது அதிகம் கவனம் செலுத்துபவர் தான் கண்ணன். 2016ஆம் ஆண்டு செங்குளம் கிராமத்தில் திருவிழா நடைபெற்றது. அப்பொழுது அத்திரு விழாவில் ரவுடியான விஜய் தகராறு செய்து வந்துள்ளார். ஒரு பெரிய தலைவராக இருந்த கண்ணன் அவரை கண்டித்துள்ளார்.
இவர் கண்டித்தது பிடிக்காமல் திருவிழா முடிந்ததும் விஜய் தன்னை கண்டித்த ஊரு நாட்டாமையான கண்ணனை சரமாரியாக வெட்டி கொன்று விட்டார். விஜய் அவர் மட்டும் தனியாக செல்லாமல் தனது சகோதரர்கள் வினோத் விகாஸ் உள்ளிட்ட ருடன் சேர்ந்துவிஜய் அவர் மட்டும் தனியாக செல்லாமல் தனது சகோதரர்கள் வினோத் விகாஸ் உள்ளிட்ட ருடன் சேர்ந்து செயலை செய்துள்ளார். அதனை அடுத்து போலீசார் விஜய் விகாஸ் வினோத் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்கள் செய்த இச்செயலால் விஜய் விகாஸ் குடும்பத்தினர் செங்குளம் கிராமத்தை விட்டு வாகைகுளம் கிராமத்திற்கு சென்றனர். தற்போது ஜாமினில் வெளிவந்த வினோத் விஜய் விகாஸ் ஆகியோரும் தனது தந்தையருடன் வசித்து வந்துள்ளனர். இதில் குறிப்பிட்ட விஜய் மீது மட்டும் பல கொலை கொள்ளை முயற்சிகள் சம்பந்தமாக 10 வழக்குகள் சுற்றியுள்ள கிராம காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பத்து வழக்குகளில் ஒரு வழக்கு சம்பந்தமாக கல்லிடைக்குறிச்சி போலீசார் விஜய் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அடைத்து ஒரு மாதத்திற்குள்ளேயே விஜய் ஜாமினில் வெளிவந்தார். இவர் வெளிவந்தவுடன் தந்த சொந்த ஊரான செங்குளம் கிராமத்திற்கு சென்று அங்குள்ள மக்களை மிரட்டியுள்ளார். அதனை எடுத்து தன் குடும்பம் செங்குளம் கிராமத்தில் வசிக்க முடியாமல் போனதற்குக் அண்ணன் குடும்பத்தினர் தான் காரணம் என்று நினைத்து குடும்பத்தின் மீது பெரும் வஞ்சம் ஆக இருந்தார். திடீரென்று ஒருநாள் கண்ணன் மகன் சிவ பிரவீன் மற்றும் அவரது உறவினர் பயிருக்கு உரம் வாங்குவதற்காக கடைக்கு வந்துள்ளனர்.அதைப் பார்த்த விஜய் கண்ணன் மகனான சிவ பிரவினை வெட்டுவதற்காக தனது மோட்டார் வண்டியில் அவரை பின்தொடர்ந்துள்ளார். அதிர்ந்து போன சிவ பிரவீன் தனது உறவினர்களுடன் செங்குளம் கிராமத்தில் புகுந்தார்.
விஜய் கண்ணன் மகனான சிவ பிறவினை வெட்ட வருவதை பொதுமக்கள் பார்த்தனர். பொதுமக்களுக்கு விஜய் முன்பே அதிகத் தொல்லை கொடுத்ததால் இச்சமயத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டனர். பொதுமக்கள் அனைவரும் விஜய் நோக்கி கற்களை தூக்கி வீசி உள்ளனர். அதில் விஜய் தலையில் பலமாகத் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விஜய் உடன் இருந்த விகாஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஊர் மக்கள் பழிவாங்கும் நோக்கில் இதனை செய்தார்களா அல்லது ஒரு உயிரை காப்பாற்ற செய்தார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.