America: ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் நிறுத்தம் செய் அமெரிக்க முடிவு அதற்கு வடகொரியா சம்மதம் தெரிவிக்குமா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டுக்கு இடையேயான போர் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் நாட்டுக்கு பெரும் இராணுவ மற்றும் ஆயுத உதவிகளை செய்து வருகிறது அமெரிக்கா. இந்த உதவியின் காரணமாக ரஷ்யாவின் தாக்குதலுக்கு சற்றும் பின் வாங்காமல் போரை தொடர்ந்து நடத்தி வருகிறது உக்ரைன்.
மேலும், ரஷ்யா உக்ரைன் மீதான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்திய பின்னும் எவ்வித ராணுவ பின்வாங்கல் நடவடிக்கையை கூட உக்ரைன் எடுக்க வில்லை. இந்த இரு நாடு போரும் எப்போது முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியில் எழுந்து இருக்கிறது. இந்த போரில் இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் நாட்டிற்கு நாம் உதவி செய்து வருவாதால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. எனவே நான் அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்றால் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என டிரம்ப் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
எனவே வரும் ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ள நிலையில் தற்போது ரஷ்யா அதிபர் புதினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. மேலும், ரஷ்யா அமெரிக்காவின் ஒப்பந்தத்திற்கு உடன்படுமா என்ற சந்தேகம் எழுந்து இருகிறது.
உக்ரைன் நாட்டுக்கு அமெரிக்க உதவுவதைப் போல ரஷ்யாவிற்கு ராணுவ உதவிகளை வட கொரியா செய்து வருகிறது. இதனால் போர் நிறுத்தம் செய்ய வாய்ப்பு குறைவு என்ற தகவல் வெளியாகி வருகிறது.