எதிரி நாடுகளை கதிகலங்க வைத்த “ரஃபேல் விமானம்” இன்று முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்படுகிறது!

0
130

எதிரி நாடுகளை கதிகலங்க வைத்த “ரஃபேல் விமானம்” இன்று முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்படுகிறது!

போர்க்களத்தில் குறிவைத்த இலக்கை அசராது தாக்கும் அதிதசக்தி கொண்ட ரஃபேல் விமானங்களை வாங்க,கடந்த 2016ஆம் ஆண்டு 59 ஆயிரம் கோடி செலவில் 36 விமானங்களை வாங்க ரஷ்யாவிடம் இந்தியா ஒப்பந்தமிட்டது.இதில் 5 விமானங்கள் மட்டும்,எல்லைப் பகுதியில் பாதுகாப்பு காரணமாக கடந்த ஜூலை 29 ஆம் தேதி ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது.இந்த அதீத வலிமை மிக்க ரஃபேல் விமானத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி விமானப் படையில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் பல்வேறு காரணங்களால் விமானப்படையில் சேர்ப்பதற்கு காலதாமதமானது.
இந்நிலையில் இன்று,ரஃபேல் விமானங்களை இந்திய விமானப்படையில் முறைப்படி இணைக்க நிகழ்ச்சி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியானது ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தில் நடைபெற உள்ளது.
இந் நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று விமானங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்க இருக்கிறார்.மேலும் இந்நிகழ்ச்சியில் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லியும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாரம்பரிய சர்வ தர்ம பூஜையை தொடர்ந்து,ரஃபேல்,தேஜாஸ்,
மற்றும் சராங் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.பிறகு ரெஃபேல் விமானத்தின் மீது,தண்ணீர் பீச்சியடிக்கும் நிகழ்ச்சி அதாவது வாட்டர் சல்யூட் என்னும் மரியாதை செலுத்தப்பட உள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.