Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அவன் இவன் படத்தை போன்ற அரங்கேறிய உண்மை சம்பவம்! கைதிகள் ஆணியை முழுங்கிய விபரீத செயல்!

the-real-incident-that-he-staged-like-the-ivan-movie-prisoners-attempt-suicide-by-nailing-nails

the-real-incident-that-he-staged-like-the-ivan-movie-prisoners-attempt-suicide-by-nailing-nails

அவன் இவன் படத்தை போன்ற அரங்கேறிய உண்மை சம்பவம்! கைதிகள் ஆணியை முழுங்கிய விபரீத செயல்!

அவன் இவன் படத்தில் ஆர்யா தனது காதலியை சந்திப்பதற்காக சிறையிலிருந்து வெளியே செல்வதற்கு விளங்கியதாக நாடகமாடி செல்வார். அதேபோல புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை கைதிகள் ஆணியை முழுங்கி தற்கொலை முயற்சி செய்துள்ளனர். புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனை அனுபவிப்பவர்கள் மற்றும் விசாரணை கைதிகள் என 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு போலீஸ் அதிகாரிகளுக்கு அங்குள்ள கைதிகள் செல்போன்கள் போன்றவை உபயோகித்து வருவதாக தகவல் வந்தது.

தகவலை அறிந்த போலீசார் அங்கு சோதனையிட்டு அங்குள்ள போன்கள், மதுபானங்கள் போன்றவற்றை கைப்பற்றினர். இதனையெல்லாம் கைப்பற்றியதை தாங்கமுடியாமல் சில கைதிகள் தற்கொலைக்கு முயன்றனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது உடல்நிலை சீரானதும் மீண்டும் அவர்களை சிறையில் அடைத்தனர். நேற்று மாலை மேலும் இரு கைதிகளான சுகன் , பிரதிப் என்பவர்கள் திடீரென்று இரும்பு ஆணியை விழுங்கி தற்கொலைக்கு முயன்றனர்.இவர்கள் இரண்டு பேரையும் போலீசார் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்கொலை செய்ததற்கான காரணம் என்பதை கண்டறிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் அவர்கள் குடும்பத்துடன் தொலைபேசி வழியாக பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .இருவரும் வெகு நேரமாக தொலைபேசியில் அவர் குடும்பத்தினருடன் பேசி வந்துள்ளனர். இவர்களுக்கு பிறகு மற்ற கைதிகளும் பேசுவதற்கு காத்துக்கொண்டிருந்தனர்.

இவர்களை அதிக நேரம் பேசி வந்ததால் காவலர்கள் இவர்கள் பேசும் பொழுது செல்போன் இணைப்பை துண்டித்து விட்டனர்.இதனால் மிகவும் வேதனை அடைந்து இவர்களிருவரும் இரும்பு ஆணி விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர் இது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Exit mobile version