பிரேசில் அதிபர் அலட்சியமே காரணம்

0
98

கொரோனாவின் கோரதண்டவத்தால் உலகம் முழுவதும் பெரிய சிக்கல்களை சந்தித்துள்ளது. அதுவும் கொரோனவால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் பிரேசிலும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அமெரிக்காவில் கொரோனவால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை கடந்துள்ளது அதேபோல் பிரேசிலில் ஒரு லட்சத்தை தாண்டியது. பிரேசிலில் ரியோ டி பாஸ் என்ற தன்னார்வ நிறுவன தொண்டு ஒன்று இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆயிரம் பலூன்களை பறக்க விட்டது.  பிரேசில் அதிபர் ஆரம்பத்தில் இருந்து கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் அலட்சியம் காட்டியதால்தான் தீவிரமாக பரவியது என்று கூறி வருகின்றனர்.