Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உலகநாயகன், சின்னக் கலைவாணர் விவேக் இணைந்து நடிக்காததற்கு காரணம் என்ன?

kamal haasan and vivek

Kamal haasan and Vivek: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் தற்போது படங்களில் நடித்துக்கொண்டும் தனது அரசியல் பயணத்தில் மிகவும் பிஸியாக உள்ளார். இவர் அவ்வப்போது ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார். சினிமாவில் கால் பதிக்காத இடமே இல்லை என்று கூறும் அளவிற்கு சினிமா துறையை கரைத்து குடித்தவர் தான் கமல்.  நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், திரைக்கதையாசிரியர், இயக்குநர் போன்ற பன்முகங்களை கொண்டவர் தான் நடிகர் கமல்ஹாசன்.

அதேபோன்று தமிழ் சினிமாவில் யாராலும் மறுக்க முடியாத நகைச்சுவை நடிகர் தான் சின்ன கலைவாணர் விவேக். இவர் நடிக்கும் படங்களில் மக்களுக்கு தன் நகைச்சுவையின் மூலம் பகுத்தறிவை புகட்டுபவர். இவர் நடித்த படங்கள் மூலம் அறியாமையால் நம்பிக்கொண்டிருக்கும் பல விஷயங்களை மக்களுக்கு புரிய வைப்பார். இதனால் தன்னுடைய நகைச்சுவையை அவருக்கு ஏற்றப்படி இயக்குநரின் சம்மதத்துடன் மாற்றியமைப்பதும் வழக்கம். இவர் பல விருதுகள் வாங்கியும் உள்ளார். அப்துல்காலம் ஐயாவின் வழியை பின்பற்றிய ஒருவர்களில் இவரும் ஒருவர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் இரண்டு முக்கிய நடிகர்களாக கருதப்படும் நடிகர் கமலும், விவேக் இருவரும் இதுவரை ஒரு திரைப்படங்களில் கூட நடிக்கவில்லை என்பது ஆச்சரியம் தான். விவேக் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் வரை நடித்தவர். ஏன் கமல்ஹாசனுடன் நடிக்கவில்லை என்ற கேள்வியும் ரசிகர்களுக்கு அவ்வப்போது எழுந்து வந்து கொண்டு தான் இருந்தது.

காரணம்

ஒரு சிலர் கமல்ஹாசன் பன்முக திறமைக்கொண்டவர் என்பதால் அவர் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் அவரே நடித்துக்கொண்டதாலும், விவேக் இரண்டாம் நிலை நகைச்சுவை நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விரும்பவில்லை என்றும் அப்பொழுது கூறப்பட்டு வந்தது. மேலும் ஹே ராம், அன்பே சிவம், ஆளவந்தான், வேட்டையாடு விளையாடு, உன்னைப்போல் ஒருவன், விஸ்வரூபம் 1, 2, பாபநாசம் ஆகிய படங்களில் எல்லாம் நகைச்சுவையை பார்க்க முடியாது என்றும், மீதி படங்களில் எல்லாம் கமல் அவரே நகைச்சுவை பாத்திரத்தில் முக்கிய பங்கும் வகித்தார் என்றும் கூறப்பட்டு வந்தது.

ஒரு சிலர் கமல் நடிப்பில் வெளியான தெனாலி படத்தில் பாப் கேரக்டரில் முதலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியது விவேக் என்றும், விவேக் அவரின் கதாபாத்திரத்தை மேம்படுத்துவதற்காக ஸ்கிரிப்டை மாற்றியதாகவும் தெரியவந்தது. இதனால் கமல்ஹாசன் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் இதனால் மற்றொரு நடிகர் நடிக்க வேண்டியதாயிற்று எனவும் தகவல் வெளியானது.

மேலும் பாபநாசம் வெளிவந்த சமயம், நடிகர் விவேக் நடித்த பாலக்காட்டு மாதவன் திரைப்படமும் வெளிவந்தது. இதனை குறித்து நடிகர் விவேக் நிகழ்ச்சி ஒன்றில் தனது வருத்தத்தை மறைமுகமாக தெரிவித்திருந்தார். எனினும் மாறுப்பட்ட கருத்துக்கள் வந்த போதிலும் இறுதியாக நடிகர் விவேக் மற்றும் கமல் இருவரும் இந்தியன்-2 படத்தில் நடிப்பதாக தகவல் வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தது. ஆனால் எதிர்ப்பாராதவிதமாக இந்த படத்தின் படப்பிடிப்பு பல காரணங்களால் பாதியில் நின்றது. மீண்டும் படப்பிடிப்பு தொடங்குவதற்குள்  நடிகர் விவேக் இறந்துவிட்டார். ஆனால் கமல் மற்றும் விவேக் நடித்த காட்சிகளும் அதில் இருந்தன. நடிகர் கமல் அதுசமயம் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் இருவரும் கடைசி வரை ஒன்றாக நடிக்க முடியாமல் போய்விட்டாதகவும் வருத்தம் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்தியன்-2 படத்தில் (Indian 2) விவேக், கமல் நடித்த காட்சிகள் இருப்பதால் திரைப்படம் வெளியாகும் போது இருவரின் காட்சிகள் படத்தில் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: என் வாழ்க்கையில் செய்த முட்டாள்தனமான செயல் இது நடிகை மாளவிகா..!

Exit mobile version