Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்களிடம் பணம் ஒட்டாமல் போக காரணம் இந்த 5 தவறுகள் தான்!

#image_title

உங்களிடம் பணம் ஒட்டாமல் போக காரணம் இந்த 5 தவறுகள் தான்!

வீட்டில் பணம் தங்காமல் போக நாம் செய்யும் சில தவறுகள் தான் காரணம். இந்த தவறுகளை திருத்திக் கொண்டால் பணம் ஈர்க்கப்பட்டு வாழ்வில் முன்னற்றம் ஏற்படும்.

*செருப்பு

வீட்டு வாசலில் பழுதான செருப்பு, கிழிந்த செருப்பை விட்டு வைக்கக் கூடாது. உபயோகப்படுத்தக் படுத்தக் கூடிய நிலையில் உள்ள செருப்பை மட்டும் வீட்டு வாசலில் வைக்க வேண்டும்.

இந்த செருப்பை அலங்கோலமாக விடாமல் அடிக்கி வைக்க வேண்டும். இரவு நேரத்தில் கடவுள் நம் வீட்டிற்கு வருகை வந்து சுத்தமாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள். இவ்வாறு இருக்கும் பொழுது வாசலில் செருப்பு அலங்கோலமாக கிடந்தால் கடவுள் நம் வீட்டிற்கு வர மாட்டார். இதனால் பணக் கஷ்டம் அதிகம் ஏற்படும்.

*துடைப்பம்

வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் துடைப்பத்தை முறையாக பராமரிக்க வேண்டும். துடைப்பத்தில் மகாலட்சுமி இருக்கிறார் என்பது ஐதீகம்.

இந்த துடைப்பத்தை வீட்டு வாசலில் போட்டு வைக்கக் கூடாது. வீட்டின் உள் பகுதியில் மறைவான இடத்தில் தான் வைக்க வேண்டும். துடைப்பத்தை நிறுத்தி வைக்கக் கூடாது. படுத்தவாறு தான வைக்க வேண்டும்.

துடைப்பம் பழுதாகி விட்டால் அதை அப்புறப்படுத்தி விட்டு புது துடைப்பத்தை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

*ஓடாத கடிகாரம்

வீட்டு சுவற்றில் கடிகாரங்கள் மாட்டி வைத்திருக்கும் நம்மில் பலர் அவை ஓடுதா? இல்லையா? என்பதை கவனிப்பதில்லை.

ஓடாத கடிகாரத்தை வைத்திருப்பதால் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் தான் அதிகரிக்கும். இதனால் பணச் செலவு ஏற்படும்.

*கிழிந்த துணி மற்றும் அழுக்கு துணி

வீட்டில் கிழிந்த துணி இருந்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்தி விடவும். அதேபோல் பயன்படுத்திய துணிகளை துவைக்காமல் சேர்த்து வைத்திருக்கும் பழக்கம் இருந்தால் வீட்டில் தரித்திரம் தலைவிரித்தாடும். எனவே தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அழுக்கு துணிகளை துவைப்பது நல்லது.

அதேபோல் துவைத்த துணிகளை உடனடியாக மடித்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வீடு அலங்கோலம் இல்லாமல் இருக்கும்.

*உடைந்த பொருட்கள்

விரிசல் விழுந்த பொருட்கள், உடையும் நிலையில் உள்ள பொருட்கள், ஒடுங்கிய பொருட்கள் இருந்தால் அவற்றை உடனடியாக வெளியேற்றி விடவும்.

இந்த பொருட்கள் வீட்டில் இருந்தால் எதிர்மறை எண்ணங்கள் தான் அதிகரிக்கும். இதனால் கடன்தொல்லை, பண விரையம் அதிகம் ஏற்படும்.

Exit mobile version