Kanguva:நடிகர் சூர்யாவின் “கங்குவா” திரைப்படம் ரீலிஸ் ஆவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படம் தான் “கங்குவா” இப்படமானது வருகின்ற நவம்பர் 14 அன்று உலக முழுவதும் திரைக்கு வர இருக்கும் நிலையில் தொடர்ந்து இப் படம் திரையிட சிக்கல்கள் வந்து கொண்டு இருக்கிறது. அதாவது நடிகர் சூர்யா திரைப்படம் திரைக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது, “கடைசியாக எதற்கும் துணிந்தவன்” திரையிடப்பட்டது. இப் படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக இருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக அமையவில்லை.
எதனால் “கங்குவா” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. மேலும் “கங்குவா” ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படமானது “பேண்டஸி ஜானர் ” கதை வடிவில் எடுக்கப்பட்டது. முன்னதாக கடந்த 13 ஆம் தேதி “ஸ்டுடியோ கிரீன்” தயாரிப்பு நிறுவனத்தின் மீதான வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது. இதில் “ஸ்டுடியோ கிரீன்” நிறுவனமானது ரிலைன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.20 கொடியை அதன் பங்கை வழங்கிய பின் “கங்குவா” படத்தை ரீலிஸ் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இத்தொகை அந்த நிறுவனம் செலுத்தியது, இந்த வழக்கினால் தான் கடந்த 10ஆம் தேதி ரீலிஸ் ஆக வேண்டிய “கங்குவா” திரைப்பட தேதி வரும் 14ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தான் மீண்டும் பியூயல் டெக்னாலஜிஸ் என்ற டப்பிங் நிறுவனம் “ஸ்டுடியோ கிரீன்” நிறுவனத்திற்கு 6 கோடியே 60 லட்சம் கடனாக வாங்கி இருக்கிறது.
இதில் 5கோடி திரும்ப கொடுத்து இருக்கிறது மீதமுள்ள 1 கோடியே 60 லட்சம் ரூபாய் வழங்க பியூயல் டெக்னாலஜிஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று அமர்வுக்கு வந்தது.
அதில் பியூயல் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு மீதமுள்ள 1 கோடியே 60 லட்சம் ரூபாய் வழங்கும் வரை “கங்குவா”திரைப்படம் திரையிடக்கூடாது என தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இதனால் “கங்குவா” திரைப்படம் திட்டமிட்டபடி நாளை நவம்பர் 14 அன்று திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.