USA:அமெரிக்காவின் 47 வது அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது.
அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நேற்று நவம்பர் 5ஆம் தேதி நடைபெற்றது. தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இது அமெரிக்காவின் 47 வது அதிபர் தேர்தல் ஆகும்.இத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்கள். கமலா ஹாரிஸ் இந்தய வம்சா வழியை சேர்ந்தவர் ஆவர்.
அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘எலக்டோரல் காலேஜ்’ (வாக்காளர் குழு) நடைமுறை பின்பற்றப்படுகிறது. அந்த நாட்டில் உள்ள மாகாணங்களில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள். ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர்கள் உறுப்பினர் குழு இருக்கிறது. குறைந்தது 270 உறுப்பினர் குழு ஆதரவை பெற்றால் அந்த வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது காலை 8 மணி நிலவரப்படி டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார். டிரம்ப் 198 இடங்களில் 53%, வாக்குகளையும், கமலா ஹாரிஸ் 112 இடங்களில் 46% வாக்குகளை பெற்றுள்ளார். மேலும் 2,3 மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை முழுமையாக எண்ணப்படும். தற்போது வரை டிரம்ப் முன்னிலை பெற்று வருகிறார்.
மேலும் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள 54 உறுப்பினர்கள் ஆதரவு பெற்று கமலா ஹாரிஸ் அங்கு வெற்றி பெற்றுள்ளார். புளோரிடா மாகாணத்தில் தொடர்ந்து 3 வது முறையாக கைப்பற்றுகிறார் டிரம்ப். எனவே இவ்விருவருக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.