சேலம் அருகே திருட வந்த இடத்தில் கொள்ளையர்கள் இதை விட்டு சென்ற அவலம்??
சேலம் அருகே மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வேலவன் இவர் அப்பகுதியில் பைபாஸ் ரோட்டில் கார் பட்டறை ஒன்று நடத்தி வருகிறார்.அதன் அருகே நிதி நிறுவனமும் நடத்தியவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலன் பணியை முடித்துவிட்டு கால் பட்டறை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று அதிகாலை நான்கு முப்பது மணி அளவில் பட்டறைக்கு வந்த மர்ம நபர்கள் பட்டறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார்கள்.பின்னர் அங்குள்ள நிதி நிறுவனத்திற்குள் புகுந்த போது பற்றையின் அருகே வசித்து வரும் லாரி டிரைவர் வெங்கடேஷ் என்பவர் இச்சத்தம் கேட்டு எழுந்தார்.
இதை அறிந்த நிதி நிறுவனத்திற்குள் மர்ம நம்பர்கள் சென்றதை நோட்டமிட்ட அவர் உடனடியாக வேலவனுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அவர் நிலத்தில் உரிமையாளரான சண்முகசுந்தரனுக்கு தகவல் கூறினார். இதனையடுத்து அவர் திருடன் திருடன் என சத்தம் போட்டு கத்தியவாறு அங்கு சென்றார்.
அப்போது நிதி நிறுவனத்திற்குள் இருந்து வெளியே வந்த அந்த மூன்று நபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்நேரத்தில் அங்கு ரோந்து பணியில் ஈடு கொண்டிருந்த போலீசார் அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் பிடிக்க முயலவில்லை.
பின்னர் நிதி நிறுவனத்தில் சோதனை செய்த போது அங்கிருந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது. இதனால் அவர்கள் யார் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
இதைத்தொடர்ந்து பட்டறையில் கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு சென்றதால் அதை பறிமுதல் செய்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.