Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குடும்பத்தோடு கொரோனாவுக்கு சிக்கிய தி ராக்!

‘தி ராக்’ ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னாள் WWF சாம்பியனும், பிரபல ஹாலிவுட் நடிகருமான டுவைன் ‘ராக்’ ஜான்சன் அவரது மனைவி லாரன் ஹசியான், மற்றும் இரு பெண் குழந்தைகளான ஜாஸி மற்றும் டியா ஆகிய 4 பேருக்கும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

WWW-யின் சாம்பியன் பட்டத்தை வென்ற டுவைன் ஜான்சன், தற்போது நடிகராக உருவெடுத்து ஹாலிவுட்டின் முன்னணி கதாநாயகனாக மாறியுள்ளார்.

இவர் நடித்த ஜுமான்ஜி, ஸ்கைஸ்க்ராப்பர், சான் ஆண்ட்ரியாஸ் மற்றும் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் போன்ற படங்கள் அனைத்தும் ரசிகர் அதிக வரவேற்பு பெற்றது.

தற்போது கொரோனாவுக்கு கூண்டோடு சிக்கிய ஜான்சன், தனது  இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டதாவது: கொரோனா விற்கு நானும் என் மனைவி மற்றும் இரண்டு மகள்களும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

கடந்த இரு வாரங்களாக தனிமைப்படுத்திக் கொண்ட எங்களுக்கு தொடக்கத்தில் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் தற்போது மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு கடவுள் துணையுடன் நலமாக உள்ளோம்.

எனது இரு மகள்களுக்கு லேசாக கொரோனா அறிகுறியான தொண்டை வலி மட்டுமே உள்ளது. மற்றபடி அவர்கள் நலமாக உள்ளனர் கூடிய விரைவில் நாங்கள் நலம் பெறுவோம் என்று நம்பிக்கை அளித்துள்ளார்  

இவருடைய இந்த பதிவிற்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும்  ஜான்சன் மற்றும் அவர்கள் குடும்பத்தினரும்  கொரோனாவில் இருந்து மீண்டு எழ வேண்டும் என்ற மாதிரியான கமெண்டுகளை  தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் டுவைன் ஜான்சன் சூப்பர் ஹீரோவாக நடித்து வரும் பிளாக் ஆடம் படத்தின் இன்ட்ரோ டீசரையும் டிசி ரிலீஸ் ஆகியுள்ளது 

Exit mobile version