மும்பையில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணை வழிமறித்து பலாத்காரம் செய்த வழக்கில் போலீசார் 2 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
அதிகாலையில் சிவாஜி நகர் என்ற பகுதியில், பேருந்து நிலையத்தில் வந்து இறங்கிய அந்த பெண்ணை தனது வீட்டுக்கு போகும் வழியில் அவர் தனியாக செல்வதை பார்த்து, அந்த 4 ரவுடிகள் அவரை பின்தொடர்ந்து காலியாக இருந்த ஒரு குடிசையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறை ஆய்வாளர் அர்ஜுன் ராஜானே செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
2 ரவுடிகள் பிடிபட்ட நிலையில், தப்பிச் சென்ற 2 பேரை பிடிக்க 10 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.